2019 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த கோருதல், 7 ஆவது ஊதியக் குழுவின்படி பரிந்துரைப்படி 1 சனவரி, 2016 முதல் 21 மாத சம்பள உயர்வு நிலுவைத் தொகையை வழங்குதல், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை வழங்குவதை நிறுத்திவிட்டு, அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல், மத்திய அரசில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு இணையான சம்பளத்தைத் மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கக் கோருதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி 22 சனவரி 2019 முதல் 30 சனவரி 2019 வரை 9 நாட்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஆகும்.[1]

தமிழக அரசு தனது நிதிநிலைமையைக் காரணம் காட்டி, இப்போராட்டத்தினரின் கோரிக்கைகளை அரசு ஏற்க இணங்காததால், 30 சனவரி 2019 அன்று போராட்டத்தைப் திரும்பப் பெற்று அனைத்து போராட்டத்தினரும் பணிக்குத் திரும்பினர்.[2]

போராட்டத்தின் போக்குகள்[தொகு]

மாவட்டங்கள் முழுவதும் போராடிய ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.[3][4]

போராட்டத்தின் 8 ஆவது நாளன்று, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பணியில் சேராவிட்டால், அவர்களது பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலான ஆசிரியர்கள், போராட்டத்தை கைவிட்டு பணியில் இணைந்தனர். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்கள் தங்கள் போராட்டங்களைக் கைவிட வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமியும் கோரிக்கைவிடுத்தார்.[5]

இந்நிலையில், 29 சனவரி 2019 அன்று பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர். மேல்நிலை, உயர்நிலை ஆசிரியர்களில் 99 சதவீதத்தினரும், இடைநிலை ஆசிரியர்களில் 95 சதவீதத்தினரும் பணிக்குத் திரும்பியதாக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனர் தெரிவித்தார்.

இதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதன் சாத்தியம் குறித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னையில் 29 சனவரி, 2019 அன்று (புதன்கிழமை) கூடி நடத்திய ஆலோசனைக்குப் பிறகு ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மாணவர்கள் நலன் கருதியும், பெற்றோரின் கவலைகளைப் புரிந்துகொண்டும், நீதிபதிகள் சொன்ன ஆலோசனைகளை ஏற்றும் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் வேலை நிறுத்தத்தைத் தற்காலிகமாக கைவிடுகிறோம் என்று தெரிவித்தார்.[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஜாக்டோ ஜியோ அமைப்பின் 9 அம்ச கோரிக்கைகள்". பார்க்கப்பட்ட நாள் 1 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help) News18 தமிழ் (28 சனவரி 2019)
  2. "போராட்ட நிறுத்தத்தைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்". பார்க்கப்பட்ட நாள் 1 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help) NDTV தமிழ் (31 சனவரி 2019)
  3. "ஜாக்டோ - ஜியோ - 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்". பார்க்கப்பட்ட நாள் 1 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help) daily hunt (26 சனவரி 2019)
  4. "ஆசிரியர்கள், அரசு ஊழியர் போராட்டம் தொடர்கிறது". Archived from the original on 2019-02-03. பார்க்கப்பட்ட நாள் 1 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help) தினகரன் (30 சனவரி 2019)
  5. "தமிழகம் முழுவதும் 5 நாட்களாக நீடிக்கும் போராட்டம் அரசு ஊழியர், ஆசிரியர் கோரிக்கைகளை ஏற்க மறுப்பு". பார்க்கப்பட்ட நாள் 1 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help) இந்து தமிழ் (27 சனவரி 2019)
  6. "கோரிக்கைகள் ஏற்கப்படாமல் முடிவுக்கு வந்தது ஆசிரியர் - அரசு ஊழியர் போராட்டம்". பார்க்கப்பட்ட நாள் 1 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help) BBC News தமிழ் (30 சனவரி 2019)

வெளி இணைப்புகள்[தொகு]