உள்ளடக்கத்துக்குச் செல்

2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம்

ஆள்கூறுகள்: 18°35′02″N 98°23′56″W / 18.584°N 98.399°W / 18.584; -98.399
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2017 மத்திய மெக்சிக்கோ நிலநடுக்கம்
2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம் is located in மெக்சிக்கோ
2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம்
2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம் is located in Puebla (state)
2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம்
மெக்சிக்கோ, புவெப்லாவில் நிலநடுக்க மையம்
நாள்19 செப்டம்பர் 2017 (2017-09-19)
தொடக்க நேரம்18:14:39 UTC
கால அளவு20 செக்கன்களுக்கு பலமான அதிர்வு
நிலநடுக்க அளவு7.1 (Mw)
ஆழம்51 கிமீ (32 மைல்)
நிலநடுக்க மையம்18°35′02″N 98°23′56″W / 18.584°N 98.399°W / 18.584; -98.399
வகைஇறக்கச் சறுக்கல் (உட்தட்டு)
அதிகபட்ச செறிவுVIII (கடுமை)]]
உயிரிழப்புகள்குறைந்தது 230 பேர் இறப்பு, 800+ காயம்

2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம் (2017 Central Mexico earthquake) 2017 செப்டம்பர் 19 அன்று பிற்பகல் 13:14 நநேவ (18:14 ஒசநே) 7.1 MW அளவுடன் மெக்சிக்கோவின் புவெப்லா நகரில் இருந்து 55 கிமீ தெற்கே தாக்கியது. ஏறத்தாழ 20 செக்கன்களுக்கு மிகப்பலமான அதிர்வுகள் உணரப்பட்டன. இந்நிலநடுக்கத்தால் மெக்சிக்கோவின் புவெப்லா, மொரேலொசு ஆகிய மாநிலங்களும், மெக்சிக்கோ நகரமும் பாதிப்புக்குள்ளாயின. நாற்பதிற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன.[1][2][3] மெக்சிக்கோ நிலநடுக்க எச்சரிப்பு மையம் மெக்சிக்கோ நகரில் 20 செக்கன்கள் எச்சரிக்கையை அறிவித்தது. குறைந்தது 230 பேர் உயிரிழந்ததாக இரண்டாம் நாள் செய்திகள் தெரிவித்தன.[4] 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.[5]

இந்நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்னர், மெக்சிக்கோவில் 1985 ஆம் ஆண்டு நிலநடுக்க அழிவுகள் நினைவுகூரப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் இதே நாளன்று மெக்சிக்கோவைத் தாக்கிய நிலநடுக்கம் 10,000 இற்கும் அதிகமானோரைக் கொன்றது.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "M 7.1 - 5km ENE of Raboso, Mexico". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 19 September 2017. பார்க்கப்பட்ட நாள் 19 September 2017.
  2. Almasy, Steve; Simon, Darran (19-09-2017). "Central Mexico earthquake kills dozens, topples buildings". CNN. http://www.cnn.com/2017/09/19/americas/mexico-earthquake/index.html. பார்த்த நாள்: 19-09-2017. 
  3. "Mueren 4 tras sismo; caen 29 edificios [4 die in earthquake after 29 buildings fall]" (in Spanish). Reforma. 19-09-2017. http://www.reforma.com/aplicaciones/articulo/default.aspx?id=1213712&v=5. பார்த்த நாள்: 19-09-2017. 
  4. "Suman 230 muertos por sismo, confirma Protección Civil [230 killed by quake, Civil Protection confirms]" (in es) இம் மூலத்தில் இருந்து 2017-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170921021712/http://www.informador.com.mx/mexico/2017/740210/3/suman-230-muertos-por-sismo-confirma-proteccion-civil.htm. 
  5. "Saldo del sismo en la CDMX: 94 muertos, más de 800 lesionados y 214 desaparecidos [Mexico City earthquake claims 94 lives, more than 200 injured and 214 missing]" (in es) இம் மூலத்தில் இருந்து 2017-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170921000518/https://www.elsoldelcentro.com.mx/metropoli/cdmx/saldo-del-sismo-en-la-cdmx-86-muertos-mas-de-700-lesionados-y-214-desaparecidos. 
  6. "Powerful Earthquake Shakes Mexico On 32nd Anniversary Of Deadly Temblor". NPR. 19-09-2017. http://www.npr.org/sections/thetwo-way/2017/09/19/552141609/powerful-earthquake-shakes-mexico-on-32nd-anniversary-of-deadly-temblor. பார்த்த நாள்: 19-09-2017. 
  7. "Starkes Erdbeben erschüttert Mexiko" (in de). Tagesschau. 19 September 2017. http://www.tagesschau.de/ausland/erdbeben-mexiko-105.html. பார்த்த நாள்: 19-09-2017. 

வெளி இணைப்புகள்

[தொகு]