2017 குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள்
2017 குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள் | |
---|---|
இடம் | டன்டாவும் அலெக்சாந்திரியாவும், எகிப்து |
ஆள்கூறுகள் | 30°06′29″N 31°20′23″E / 30.108059°N 31.339645°E (Tanta), 31°11′54″N 29°53′58″E / 31.198290°N 29.899403°E (Alexandria) |
நாள் | 9 ஏப்ரல் 2017, குருத்து ஞாயிறு |
தாக்குதலுக்கு உள்ளானோர் | கொப்டிக் கிறித்தவர்கள் |
தாக்குதல் வகை | தற்கொலைத் தாக்குதல் |
ஆயுதம் | வெடிக்கும் உடல் அங்கிகள் |
இறப்பு(கள்) | டன்டா: 27 அலெக்சாந்திரியா: 17 மொத்தம்: 44[1] |
காயமடைந்தோர் | டன்டா: 78 அலெக்சாந்திரியா: 48 மொத்தம்: 126[1] |
சந்தேக நபர் | ஐஎஸ்ஐஎஸ் – சீனாய் மாகாணம் (உரிமை கோரப்பட்டது)[2] |
2017 குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள் என்பன, குருத்து ஞாயிறு தினமான 09 ஏப்ரல் 2017 அன்று இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் ஆகும்.[3] இத்தாக்குதல்கள் வட எகிப்திய நகரான டன்டாவில் அமைந்துள்ள புனித சோர்சுத் தேவாலயத்திலும், அலெக்சாந்திரியாவின் முக்கிய தேவாலயமான புனித மார்க்ஸ் பேராலயத்திலும் இடம்பெற்றன. இத்தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. [4][5][2] கோப்டிக் கிறுத்துவர்களின் தேவாலயத்தில் நடந்த இத்தாக்குதலில் அலெக்சாந்திரியாவில் 17 பேரும் டன்டாவில் 28 பேரும் ஆக மொத்தம் 45 பேர் கொல்லப்பட்டனர்.[6] இதைத்தொடர்ந்து எகிப்தில் மூன்று மாதக்காலத்திற்கு அவசர நிலையை அதிபர் அப்துல் ஃபடா அல் சிசி அறிவித்துள்ளார். இதன்படி பிடியாணையின்றி அதிகாரிகளால் வீடுகளை சோதனை செய்து கைது செய்ய முடியும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Hendawi, Hamza (2017-04-09). "Palm Sunday church bombings in Egypt kill 43, wound dozens". https://apnews.com/88b8fef3a96e433c902a303cd5db928e/Palm-Sunday-church-bombings-in-Egypt-kill-43,-wound-dozens. பார்த்த நாள்: 2017-04-09.
- ↑ 2.0 2.1 "Church bombings in Egypt kill 37, wound dozens". Reuters. 9 April 2017. https://apnews.com/88b8fef3a96e433c902a303cd5db928e/Church-bombings-in-Egypt-kill-37,-wound-dozens?utm_campaign=SocialFlow&utm_source=Twitter&utm_medium=AP.
- ↑ "Palm Sunday church bombings in Egypt kill 43, wound dozens". AP News. https://apnews.com/88b8fef3a96e433c902a303cd5db928e/Palm-Sunday-church-bombings-in-Egypt-kill-43,-wound-dozens. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2017.
- ↑ "Two Explosions Kill at Least 31 at Egyptian Coptic Churches on Palm Sunday". The New York Times. 9 April 2017. https://www.nytimes.com/2017/04/09/world/middleeast/explosion-egypt-coptic-christian-church.html?_r=0.
- ↑ "Explosions hit Coptic churches in Tanta, Alexandria". Al Jazeera English. 9 April 2017. http://www.aljazeera.com/news/2016/11/explosion-hits-egypt-tanta-161127070517863.html.
- ↑ "Egypt mourns Coptic church attack victims". பிபிசி. http://www.bbc.com/news/world-middle-east-39555897. பார்த்த நாள்: ஏப்ரல் 10, 2017.