2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்காக தமிழக தேர்தல் ஆணையத்தினால் எடுக்கப்பட்ட ஏற்பாடுகள் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்ட வசதிகள்[தொகு]

 • நோட்டாவுக்கென தனியான சின்னமொன்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் காணப்படும். இவ்வாறான வசதி முதல்முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
 • வேட்பாளர்களின் ஒளிப்படமும் அவர்களின் பெயருடன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் காணப்படும்.
 • வாக்காளர் சீட்டினை தேர்தல் ஆணையமே வழங்கும். இச்சீட்டில் வாக்காளரின் ஒளிப்படம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் இருக்கும். வாக்குச் சாவடி குறித்த தகவலும், வாக்காளர் பட்டியல் வரிசை எண்ணும் அச்சீட்டில் காணப்படும்.
 • அனைத்து வாக்குச் சாவடியிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, நிழலிட வசதி, சறுக்கேற்ற வசதி ஆகியன ஏற்படுத்தப்படும்.
 • மாடல் வாக்குச் சாவடிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் அமைக்கப்படும்.
 • வாய்ப்பிருப்பின், பெண்களுக்கென தனியான வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.
 • மாற்றுத் திறனாளிகள் முதலில் வாக்களிக்குமாறு வழிவகை செய்யப்படும்.[1]

வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க விழிப்புணர்வுப் பரப்புரை[தொகு]

 • பேருந்துகள், ஆட்டோக்கள், குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி பரப்புரை செய்யும் முயற்சி நாமக்கல் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது.[2]

அறிக்கை[தொகு]

இலவச அறிவிப்புகளுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக அதிமுக ஆகியவை அவற்றை நிறைவேற்ற எங்கிருந்து நிதி பெறப்படும் என்பதை விளக்கி விளக்கம் அளிக்க வேண்டும் என அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. என தமிழக தேர்தல் ஆணையர் லக்கானி தெரிவித்துள்ளார்.[3]

திமுக தலைவர் கருணாநிதியின் தேர்தல் விதிமுறைகளை மீறி தனது முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிடுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அப்பதிவுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிக்கை அனுப்பியுள்ளார்.[4]

பறக்கும் படைகள்[தொகு]

 • பறக்கும் படையினர் தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் அது தொடர்பான புகார்களைக் கவனிப்பர்.
 • சமூக விரோதிகளின் செயல்கள்,பயமுறுத்தல், பணியவைத்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் மற்றும் அளவுக்கதிகமாக பிரசார செலவுகள், ரொக்கமாக அல்லது பொருளாக கையூட்டு வழங்குதல் பொருட்டு நடைபெறும் பெரிய அளவிலான ரொக்க பரிமாற்றம் உள்ளிட்டவற்றை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வர்.
 • தேர்தல் செலவினம் செலவிடப்பட்டது, வேட்பாளர், அரசியல் கட்சியால் அதிகாரமளிக்கப்பட்டு செலவிடப்பட்டது ஆகிய அனைத்து புகார்களையும் கவனிப்பர்.
 • தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட பின்னர் அனைத்து பெரிய பேரணிகள், பொதுக்கூட்டங்கள் அல்லது அரசியல் கட்சிகளால் மற்ற பெரிய செலவுகள் செய்தது ஆகிய அனைத்தையும் விடியோ கண்காணிப்புக் குழுவின் உதவியுடன் விடியோ படம் எடுப்பர்.
 • சட்டத்திற்கு புறம்பான பொருள்களை, பணத்தினை கைப்பற்றி, சான்றுகளையும் சேகரித்து, கைப்பற்றப்பட்டவரிடமிருந்து பெறப்பட்ட வாக்கு மூலங்களை பதிவு செய்வர்[5].

பணம் பறிமுதல்[தொகு]

 • ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, உரிய ஆவணங்களின்றி கொண்டு செ‌ல்லப்பட்ட 20 கோடியே 24 இலட்சம் உரூபாய் பணம் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.[6]. இந்தியாவிலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில்தான் வாக்காளர்களுக்கு தர வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுபோன்ற அத்துமீறல்கள் காரணமாக கரூர் மாவட்டத்தை தேர்தல் ஆணையம் தனது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது. [7]
 • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் - குன்னத்தூர் சாலையில் சனிக்கிழமையன்று காலையில் தேர்தல் அதிகாரிகளும் துணை ராணுவப் படையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வந்த மூன்று கண்டெய்னர் லாரிகள் நிறுத்தப்பட்டன. 570 கோடி அவற்றில் இருந்தது இந்தப் பணம் தொடர்பாக காண்பிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து சந்தேகம் இருந்ததால் மூன்று லாரிகளும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டன. [8]

பதவி மாற்றம்[தொகு]

தேர்தல் ஆணையம் 18 இ ஆ ப, இ கா ப அதிகாரிகளை மாற்றம் செய்து உத்தரவிட்டது.[9] இதில் 4 பேர் மாவட்ட ஆட்சியர்கள். 5 பேர் இகாப அதிகாரிகள், மாவட்ட காவல் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றியவர்கள். எஞ்சிய 9 பேர் துணைக் காவல் கண்காணிப்பாளர் மட்டத்தில் இருப்பவர்கள். வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் மாற்றப்பட்டு ராஜேந்திர ரத்னுவும், சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் மாற்றப்பட்டு, கார்த்திகேயனும், திண்டுக்கல் ஆட்சியர் ஹரிகரன் மாற்றப்பட்டு சத்திய பிரதா சாஹுவும், தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நாகராஜனும் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி மாற்றப்பட்டு, மகேஸ்வரியும், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி மாற்றப்பட்டு, அமித்குமாரும் நியமிக்கப்பட்டனர். தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் மாற்றம் செய்யப்பட்டு பண்டி கங்காதரும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் மாற்றப்பட்டு சசிமோகனும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா மாற்றப்பட்டு நிஷா பார்த்திபனும் நியமிக்கப்பட்டனர். இதேபோல சில மாவட்டங்களில் வருவாய் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் மாற்றம் செய்தது.

காவல் துறை தலைமை இயக்குனராக கே.பி.மகேந்திரனும் உளவுத்துறை கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனராக கரன் சின்காவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் ஒழுங்கு காவல் துறை தலைமை இயக்குனர், உளவுத்துறை காவல் துறை தலைமை இயக்குனர், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களை புதிதாக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகளை புதிய காவல் துறை தலைமை இயக்குனர் கே.பி. மகேந்திரன் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர், திருவண்ணாமலை, திருவாரூர், நெல்லை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியராக காக்கர்லா உசாவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ராசா பூசா குல்கர்சியும் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக வெங்கடேசுவும் நெல்லை மாவட்ட ஆட்சியராக சமயமூர்த்தியும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக சொர்ணாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை, திருவாரூர் மாவட்ட வல் கண்காணிப்பாளர்கள் இருவர் மாற்றப்பட்டுள்ளனர்[10]

சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரனை மாற்றி விட்டு, அவருக்குப் பதில் புதிய ஆணையராக அசுதோஷ் சுக்லாவைவும்..சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதிக்கு பதிலாக சி.சைலேந்திரபாபுவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.[11]

தேர்தல் தள்ளிவைப்பு[தொகு]

ஏப்ரல் 22ஆம் தேதியன்று அரவக் குறிச்சியிலுள்ள அன்புநாதன் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் 4.77 கோடி ரூபாய் பிடிபட்டதையும் மே 10ஆம் தேதி தி.மு.க. வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி வீட்டிலும் அவருடைய மகன் சிவராமனின் சென்னை மற்றும் கரூர் இல்லங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாகவும் அங்கிருந்து 1.98 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் சுட்டிக்காட்டி அரவக்குறிச்சியில் தேர்தலை ஆணையம் தள்ளி வைத்தது. இங்கு மே 23 அன்று தேர்தலும் மே 25 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.[12][13]

பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் அதிகளவில் வழங்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து தஞ்சாவூர் சட்டசபை தொகுதியிலும் மே23-ந் தேதிக்கும் ஓட்டு எண்ணிக்கை மே25 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது[14]

தென்காசி நகராட்சிக்குட்பட்ட பொன்னமரன் நடுநிலைப் பள்ளியில் எண் 56, 57 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றிருந்தன. இதில் 56வது வாக்குச்சாவடியில் வாக்கு பதிவானதை விட கூடுதலாக 52 வாக்குகள் பதிவானதாக மின்னனு வாக்குப்பெட்டி காட்டியதால் இதற்கு மே-18 மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.[15]

மே 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கு அன்றைய தினம் தேர்தல் நடைபெறாது என்றும், யூன் 13 அன்று தேர்தல் நடைபெறும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.[16].

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் யூன் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பு விலக்கிக்கொள்ளப்படுவதாகவும் நிலைமை சீரான பின்னர்தான் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.[17]

தகவல் தொடர்பு[தொகு]

 • ‘TNelections’ எனும் பெயரில் நகர்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது[18].

பதவி அளிப்பு[தொகு]

காத்திருப்போர் பட்டியிலில் இருந்த ஒன்பது இகாப அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகளில் பணி நியமனம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.[19] டி.கே. ராஜேந்திரன் சிறைத்துறை காவல் தலைமை இயக்குநராக (காதஇ) நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு துணை காதஇ இருந்த திரிபாதி காவல்துறை அமலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மயில்வாகனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துனை ஆய்வாளராகவும் உளவு குற்ற புலனாய்வு கண்காணிப்பாளராக எஸ்.மகேஸ்வரனும் காவல்துறை பயிற்சி கல்லூரி கண்காணிப்பாளராக இ.எஸ்.உமாவும் கட்டாய காத்திருப்பில் இருந்த எஸ்.லட்சுமி கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும். குற்றப்பிரிவு புலனாய்வு காவல் கண்காணிப்பாளராக ஜெ. லோகநாதனும் தமிழ்நாடு காவல் சிறப்பு படை 7வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக சுப்புலட்சுமியும் சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக ராமகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பாதுகாப்பு பணி[தொகு]

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட மே3ம் தேதி 300 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப்படையின் 25 ஆயிரம் வீரர்கள் தமிழகம் வருகின்றனர். துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா வரும் 3ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆய்வு செய்கிறார். புதிய வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி எண், அடையாள அட்டை எண் எஸ்.எம்.எஸ்.,ல் அனுப்பப்படும்' என்று அவர் கூறியுள்ளார். தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக முதலில் 275 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் மட்டுமே வருவதாக இருந்தது. ஆனால் பறக்கும் படையில் கூடுதல் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதால் 300 கம்பெனி ராணுவ வீரர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள். ஒரு கம்பெனியில் 72 முதல் 100 வீரர்கள் இருப்பார்கள். வடமாநிலங்களில் இருந்து துணை ராணுவ வீரர்கள் தனி ரயில் மூலம் தமிழகம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 122 பொதுபார்வையாளர்கள், 32 காவல் துறை பார்வையாளர்கள், 118 இகாப பயிற்சி அதிகாரிகளும் 29ம் தேதி முதல் தமிழகம் வருகிறார்கள்.[20]

வாக்குச் சாவடி விவரங்கள்[தொகு]

மொத்த வாக்குச் சாவடிகள் = 65,616[1]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Know Your Election: Tamil Nadu 2016". தி இந்து (ஆங்கிலம்) (10 மார்ச் 2016). பார்த்த நாள் 26 மார்ச் 2016.
 2. "Awareness campaign". தி இந்து (ஆங்கிலம்) (26 மார்ச் 2016). பார்த்த நாள் 26 மார்ச் 2016.
 3. "தி.மு.க., அ.திமு.க.,வுக்கு நோட்டீஸ்". தினமலர். பார்த்த நாள் 2016-05-14.
 4. "ஃபேஸ்புக் பதிவு குறித்து விளக்கம் கேட்டு கருணாநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்". தட்சு தமிழ். பார்த்த நாள் 2016-05-15.
 5. "தேர்தல்-விதிமுறைகள்". தினமணி (20 மார்ச் 2016). பார்த்த நாள் 20 மார்ச் 2016.
 6. "Over Rs. 20 crore in cash seized in TN so far". தி இந்து (ஆங்கிலம்) (6 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 6 ஏப்ரல் 2016.
 7. "வரலாறு காணாத அளவில் சிக்கிய பணம்.... கரூர் மாவட்டத்தை கட்டுப்பாட்டில் எடுத்தது தேர்தல் ஆணையம்!". தட்சு தமிழ். பார்த்த நாள் 23 ஏப்ரல் 2016.
 8. "திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி மர்மம் விலகியது- எஸ்.பி.ஐ. வங்கி உரிமை கோரியது: ராஜேஷ் லக்கானி". தட்சு தமிழ். பார்த்த நாள் 2016-05-14.
 9. "அம்மா உத்தரவால் மழை பெய்ததாக கூறிய கலெக்டர் உட்பட 18 ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்". தட்சு தமிழ். பார்த்த நாள் 23 ஏப்ரல் 2016.
 10. "தேர்தலுக்கான புதிய டிஜிபியாக கே.பி மகேந்திரன் நியமனம்- 5 மாவட்ட கலெக்டர்கள், 2 எஸ்.பிக்கள் மாற்றம்". தட்சு தமிழ். பார்த்த நாள் 2016-04-30.
 11. "சென்னை கமிஷனர் ராஜேந்திரன் அதிரடி மாற்றம்... சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியானார் சைலேந்திர பாபு". தட்சு தமிழ். பார்த்த நாள் 2016-05-01.
 12. "வாக்களர்களுக்குப் பணம்: அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு". பிபிசி தமிழ். பார்த்த நாள் 2016-05-14.
 13. "அரவக்குறிச்சி தொகுதி ஓட்டுப்பதிவு ஒத்தி வைப்பு: பணம், மது விநியோகம் அதிகம் என்பதால் அதிரடி". தினமலர். பார்த்த நாள் 2016-05-14.
 14. "பணப்பட்டுவாடா புகார்: அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சாவூர் தொகுதி தேர்தலும் மே 23-க்கு ஒத்திவைப்பு!". தட்சு தமிழ். பார்த்த நாள் 2016-05-15.
 15. "=கூடுதல் வாக்குகள் சர்ச்சை - தென்காசி தொகுதி 56-வது வாக்குச் சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு". தட்சு தமிழ். பார்த்த நாள் மே 17, 2016.
 16. "அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கு ஜூன் 13-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு". தட்சு தமிழ். பார்த்த நாள் மே 20, 2016.
 17. "அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் மீண்டும் ரத்து- தேர்தல் வரலாற்றில் முதல் முறை...". தட்சுதமிழ். பார்த்த நாள் மே 28, 2016.
 18. "EC unveils app 'TNelections'". தி இந்து (ஆங்கிலம்) (8 மார்ச் 2016). பார்த்த நாள் 9 மார்ச் 2016.
 19. "காத்திருப்போர் பட்டியலில் இருந்த 9 அதிகாரிகள் புதிய பொறுப்புகளுக்கு நியமனம்". தட்சு தமிழ். பார்த்த நாள் 2016-05-08.
 20. "தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 25,000 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருகை: லக்கானி". தட்சு தமிழ். பார்த்த நாள் 2016-05-01.

வெளியிணைப்புகள்[தொகு]