உள்ளடக்கத்துக்குச் செல்

2009 கனடாவில் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் தமிழர் இனவழிப்பைக் கண்டித்தும், கனடிய அரசை தமிழர்களுக்கு உதவக் கோரியும், கனடியர்கள் மத்தியிலும் தமிழரிடையேயும் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கனடாவில் 2009-ல் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. கவனயீர்ப்பு, உண்ணாநிலை, ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி, கையெழுத்துப் போராட்டம் என பல வகைகளில் இப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பபட்டன.

நான்கு தளங்கள்

[தொகு]

நான்கு முனைகள் இப்போராட்டத்தின் இலக்குகளாக இருந்தன.

ஊடகத் தளம்

[தொகு]

இலங்கையில் அரசு மேற்கொண்டு வரும் போர் பயங்கரவாதத்துக்கான போர் என இலங்கை அரசும், இலங்கை அரசுக்கு சார்பான அமைப்புக்களும் கடும் பரப்புரை மேற்கொண்டுவந்தன. இதை மீறி அங்கு இலங்கை அரசு மேற்கொண்டுவரும் இனவழிப்பை ஊடகங்ளுக்கு எடுத்துச்சொல்லி வருவது எதிர்ப்போராளிகளின் ஒரு முக்கிய கவனமாக இருந்தது.

அரசியல் தளம்

[தொகு]

அப்பொழுது, கனடாவின் நடுவண் அரசாக இருந்த கனடிய மரபுவழி அரசு இலங்கை அரசுக்கு சார்பானதாக இருந்தது. எனினும், தொடர் போராட்டத்தின் மூலம், தமிழ் மக்களுக்கு ஏற்படும் இழப்புகளை பற்றி எடுத்துச் சொல்ல முயற்சி செய்யப்பட்டது. உணவு, மருந்து, உறைவிடம் எப்படி போர் கருவிகளாக இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்டது பற்றி எடுத்துக்கூறப்பட்டது.

பொருளாதரத் தளம்

[தொகு]

கனடாவில் வாழும் தமிழர்கள் இலங்கையில் உற்பத்தியாகும் பொரும் தொகைப் பொருட்களை கொள்வனவு செய்கிறார்கள். இதை தடுப்பது எதிர்ப்புப் போராளிகளின் இலக்கு ஆகும்.

குடிமக்கள் தளம்

[தொகு]

பேரணிகளில், வீதிச் சந்தியில் மட்டுமல்லாமல், நாளாந்தம் சந்திக்கும் இதர மக்களிடமும் இலங்கைப் போரின் கொடுமைகள் பற்றி எடுத்துச் சொல்லவது உத்தியாக இருந்தது.