2009-ஆம் ஆண்டின் முக்கியக் கண்டுபிடிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சயன்ஸ் (Science) என்ற புகழ்பெற்ற அறிவியல் ஆய்வுப் பத்திரிகை வெளியிட்டுள்ள 2009 - ஆம் ஆண்டின் முக்கிய கண்டுபிடிப்புகளின் பட்டியல்:

 1. ஆர்டி என்றழைக்கப்படும் ஆர்டிபிதிகஸ் ராமிடஸ் [அ] ஆர்டிபிதிகசு ராமிடசு (Ardipithecus ramidus) : 4.4 மில்லியன், அதாவது 44 இலட்சம், ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதக்குரங்கினத்தின் (hominid) ஆழ்படிமத்தின் (fossil) கண்டுபிடிப்பு. வாலில்லாக் குரங்குக்கும் (chimpanzee) மனிதனுக்கும் பொதுவான மூதாதைய இனமாக இந்த ஆழ்படிம மனிதக்குரங்கு இருந்திருக்கும் என்பது கணிப்பு.[1]
 2. துடிப்பு விண்மூலங்கள் (pulsar)கண்டுபிடிப்பு : நாசாவின் பெர்மி காமாக்கதிர் விண்தொலைநோக்கியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
 3. ராபாமைசின் (rapamycin) : சுண்டெலிகளின் வாழ்நாளை அதிகப்படுத்தும் முயற்சி வெற்றி.
 4. கிராபீன் (graphene) : அதிகடத்துமை கொண்ட கரிம அணுக்களாலான தகடுகள்.
 5. தாவரங்களின் ஏ.பி.ஏ. வாங்கிகள் (plant ABA receptors) : (சில) தாவரங்களிலுள்ள வறட்சியை வெல்ல உதவும் மூலக்கூறுகள்.
 6. உலகின் முதல் எக்ஸ்-கதிர் லேசர் .LCLS at SLAC : தேசிய முடுக்குவிப்பான் ஆய்வகத்தின் (National Accelerator Laboratory) முயற்சி.
 7. மரபணு சிகிச்சையின் மீள்வருகை.
 8. ஒற்றைக் காந்தமுனைகள்.
 9. நிலவில் நீர் கண்டுபிடிப்பு. LCROSS-இன் கண்டுபிடிப்பு ?!
 10. ஹபிள் தொலைநோக்கி சீர்செயப்படல்.

தகவல்[தொகு]

 1. [1] The Hindu dt 31-12-2009