2-மெத்தில்-2-எப்டேன் தயோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-மெத்தில்-2-எப்டேன் தயோல்
2-Methyl-2-heptanethiol.svg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில் எப்டேன்-2-தயோல்
வேறு பெயர்கள்
2-மெத்தில்-2-எப்டேன் தயோல்
மூவிணைய ஆக்டைல் மெர்காப்டன்
மூவிணைய ஆக்டேன் தயோல்
இனங்காட்டிகள்
763-20-2
ChemSpider 63009
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 69810
UN number 3023
பண்புகள்
C8H18S
வாய்ப்பாட்டு எடை 146.29 g·mol−1
தோற்றம் வைக்கோல் நிற நீர்மம்
அடர்த்தி 0.85
உருகுநிலை
கொதிநிலை 155 °C (311 °F; 428 K)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 46°செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

2-மெத்தில்-2-எப்டேன் தயோல் (2-Methyl-2-heptanethiol) C8H18S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தயோல் வகை வேதிச் சேர்மம் என வகைப்படுத்தப்படும் இது வைக்கோல் நிறத்தில் நீர்மமாகக் காணப்படுகிறது. 2-மெத்தில்-2-எப்டேன் தயோல் வலிமையான அருவருப்பு வாசனையைக் கொண்டுள்ளது.[1][2]

மசகு எண்ணெய் உடன் கூட்டுசேர் பொருளாகவும் பலபடி வேதியியலிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. 1950 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பெட்ரோலியத்திலிருந்து தொகுப்பு வினையில் உருவாக்கப்பட்ட மூவிணைய திறந்த சங்கிலி கார்பன் வகை மெர்காப்டன்களில் இதுவும் ஒன்றாகும். மசகு எண்ணெய் கூட்டு பொருட்கள், மிதவை தாது சேகரிப்பாளர்கள், இரப்பர் உரனூட்டும் முடுக்கிகள், பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் அயனி அல்லாத அழுக்கு நீக்கிகள் என இதை பயன்படுத்தலாம் என்று ஆரம்ப கால ஆராய்ச்சி கூறுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2-METHYL-2-HEPTANETHIOL". CAMEO Chemicals. NOAA. April 12, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "ICSC: 1494, tert-OCTYL MERCAPTAN". IPCS. International Programme on Chemical Safety. April 22, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. Schulze, W.A. (1950). "Sulfur Compounds from Petroleum Hydrocarbons". Ind. Eng. Chem. 42 (5): 916–921. doi:10.1021/ie50485a043.