2-தயோயூராசில்
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-சல்பேனைலிடின்-2,3-ஈரைதரோபிரிமிடின்-4(1ஐ)-ஒன் | |
இனங்காட்டிகள் | |
141-90-2 | |
ChEBI | CHEBI:348530 |
ChEMBL | ChEMBL345768 |
ChemSpider | 1066108 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19304 |
ம.பா.த | Thiouracil |
பப்கெம் | 1269845 |
| |
UNII | 59X161SCYL |
பண்புகள் | |
C4H4N2OS | |
வாய்ப்பாட்டு எடை | 128.15 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-தயோயூராசில் (2-Thiouraci) என்பது சல்பேட்டேற்றம் அடைந்த யூராசிலைக் கொண்ட குறிப்பிட்ட வகை மூலக்கூற்று சேர்மமாகும். C4H4N2OS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது விவரிக்கப்படுகிறது.
மருத்துவ பயன்பாடு
[தொகு]2-தயோயூராசில் சேர்மம் வரலாற்றுத் தொடர்புடைய ஒரு தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைத் தடுக்கும் தனித்துவமான வேதிப்பொருளாகும்.. தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும் கிரேவ்சு என்ற நோய்க்கான சிகிச்சையில் 1943 ஆம் ஆண்டு ஆசுட்வுட்டு ஈ.பி என்பவர் முதன்முறையாக இதைப் பயன்படுத்தினார்.[1] இன்றளவிலும் இச்சிகிச்சை பயன்பாட்டில் உள்ளது. .
தைராய்டு பெராக்சிடேசு என்ற நொதியைத் தடுப்பதன் மூலம் தயோயூராசில் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைத் தடுக்கிறது. [2] சமீப காலங்களில் இதன் பயன்பாடு மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பாதுகாப்பான எதிர்தைராய்டு மருந்துகளின் வருகையால் மாற்றப்பட்டுள்ளது. பிராசிகா மற்றும் குரூசிஃபெரா இனங்களின் விதைகளில் இவ்வேதிப்பொருள் காணப்படுகிறது. தயோயூராசில் தைராய்டு எதிர்ப்பியாக இதய இரத்தக் குழாய் சிகிச்சையில் குழல் விரிப்பியாகவும் இதய செயலிழப்பு சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் இதன் பயன்பாடு பெரும்பாலும் பிற மருந்துகளால் மாற்றப்பட்டுள்ளது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Enzyklopädie Medizingeschichte.
- ↑ Nagasaka, A.; Hidaka, H. (1976). "Effect of Antithyroid Agents 6-Propyl-2-Thiouracil and l-Methyl-2-Mercaptoimidazole on Human Thyroid Iodide Peroxidase". Journal of Clinical Endocrinology & Metabolism 43 (1): 152–8. doi:10.1210/jcem-43-1-152. பப்மெட்:947933. https://archive.org/details/sim_journal-of-clinical-endocrinology-and-metabolism_1976-07_43_1/page/152.
- ↑ "2-Thiouracil".