.சிங்கப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
.சிங்கப்பூர்
அறிமுகப்படுத்தப்பட்டது 1988
அ. ஆ. பெ. வகை நாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களம்
நிலைமை இயங்குநிலை
பதிவேடு சிங்கப்பூர் வலையமைப்புத் தகவனிலையம்
வழங்கும் நிறுவனம் சிங்கப்பூர் வலையமைப்புத் தகவனிலையம்
பயன்பாட்டு நோக்கம் சிங்கப்பூருடன் தொடர்புடைய அமைப்புகள்
உண்மை பயன்பாடு சிங்கப்பூரில் புகழ் பெற்றது
ஆவணங்கள் ஆவணம்
பிணக்கு கொள்கைகள் கொள்கை
வலைத்தளம் www.nic.net.sg

.சிங்கப்பூர் (.sg, சீனம்: .新加坡) என்பது சிங்கப்பூருக்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும்.[1] .sg என்ற ஆங்கில மொழியில் அமைந்த ஆள்களப் பெயரானது 1988ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சூன் 15, 2011இல் தமிழ் மொழியில் அமைந்த .சிங்கப்பூர் என்ற ஆள்களப் பெயரும் சீன மொழியில் அமைந்த .新加坡 என்ற ஆள்களப் பெயரும் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாள்களப் பெயர்கள் சிங்கப்பூர் வலையமைப்புத் தகவனிலையத்தால் வழங்கப்படுகின்றன. .சிங்கப்பூர் ஆள்களப் பதிவுகளை ஏற்கப்பட்ட பதிவகங்களினூடாக மேற்கொள்ள முடியும்.

இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்[தொகு]

 • .com.sg-வணிக அமைப்புகள்
 • .net.sg-வலையமைப்பு வழங்குநர்கள்
 • .org.sg-குழுமங்களின் பதிவகத்திலுள்ள அமைப்புகள்
 • .gov.sg-அரசு அமைப்புகள்
 • .edu.sg-கல்வி நிறுவனங்கள்
 • .per.sg-தனியார் ஆள்களப் பெயர்கள்[2]

ஏற்கப்பட்ட பதிவகங்கள்[தொகு]

 • அடிசியோ
 • கார்ப்பரேசன் சேர்விசு நிறுவனம்
 • சைபர்சைற்று
 • இன்சிட்ரா கார்ப்பரேசன்
 • ஐ. பி. மிரர்
 • மார்க்மானிட்டர்
 • நியூமீடியா எக்சுப்பிரசு
 • பாக்னெட்டு
 • சேவ்னேம்சு
 • சிங்னெட்டு
 • உவூசு
 • வெபு கொமர்சு கம்யூனிக்கேசன்சு
 • வெப்விசன்சு[3]

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=.சிங்கப்பூர்&oldid=3539979" இருந்து மீள்விக்கப்பட்டது