உள்ளடக்கத்துக்குச் செல்

ஹோம்ஸ் ஆளுநரகம்

ஆள்கூறுகள்: 34°18′N 38°18′E / 34.3°N 38.3°E / 34.3; 38.3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹோம்ஸ் கவர்னரேட்
مُحافظة حمص
சிரியாவில் ஹோம்ஸ் ஆளுநரகத்தின் அமைவிடம்
சிரியாவில் ஹோம்ஸ் ஆளுநரகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (ஹோம்ஸ்): 34°18′N 38°18′E / 34.3°N 38.3°E / 34.3; 38.3
நாடுசிரியா
தலைநகரம்ஹோம்ஸ்
மாவட்டங்கள்7
அரசு
 • ஆளுநர்தலால் பராஸி
பரப்பளவு
 • மொத்தம்42,223 km2 (16,302 sq mi)
 Estimates range between 42,223 km² and 42,226 km²
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்18,03,000
 • அடர்த்தி43/km2 (110/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (கி.ஐ.நே.)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கி.ஐ.கோ.)
ஐஎசுஓ 3166 குறியீடுSY-HO
மொழிகள்அரபு

ஹோம்ஸ் கவர்னரேட் (Homs Governorate, அரபு மொழி: مُحافظة حمص‎ ) என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது மத்திய சிரியாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 40,940 km2 (15,807 sq mi) [1] முதல் 42,223 km2 (16,302 sq mi) [2] வரை என பல்வேறு தரவுகளில் வேறுபடுகிறது. இது புவியியல் ரீதியாக சிரியாவின் மிகப்பெரிய ஆளுநரகமாகும். ஹோம்ஸ் கவர்னரேட்டின் மக்கள் தொகை 1,763,000 (2010 மதிப்பீடு) ஆகும். ஹோம்ஸ் ஆளுநரகம் 6 நிர்வாக மாவட்டங்களாக ( மந்திகா ) பிரிக்கப்பட்டுள்ளது. ஹோம்ஸ் நகரம் ஒரு தனி மாவட்டமாக உள்ளது. ஹோம்ஸ் மாவட்டத்தின் தலைநகரம் ஹோம்ஸ் ஆகும். இதன் ஆளுநர் தலால் அல் பராஸி என்பவராவார். [3]

உதுமானிய சிரியாவின் ஒரு பகுதியாக ஹோம்ஸ் ஆளுநரகம் இருந்தது. இது ஹோம்ஸின் சஞ்சாக் என்றும் அழைக்கப்பட்டது.

மாவட்டங்கள்

[தொகு]
டக்கலாக் மாவட்டத்தில் அல்-ஹுவாஷ் நகரம்

ஆளுநரகம் பத்து மாவட்டங்களாக ( மனாதிக் ) பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மேலும் 25 துணை மாவட்டங்களாக ( நவாஹி ) பிரிக்கப்பட்டுள்ளன:

வார்ப்புரு:கோல்-பிரேக்

* - 2010 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம், முன்பு ஹோம்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருந்தது

மக்கள் வகைப்பாடு

[தொகு]

அல்-முகர்ரம் மாவட்டத்தில் பெரும்பாலும் அலவைட்டுகள் வசிக்கின்றனர். தால்டோ, டக்கலாக், ஹோம்ஸ் மற்றும் அல்-குசெய்ர் மாவட்டங்களில் அலவைட், சுன்னி முஸ்லிம்கள், கிறிஸ்தவ மக்கள் போன்றோர் கலந்து வாழ்கின்றனர். அல்-குசெய்ர் மாவட்டத்தில் ஏராளமான ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Syria Provinces".
  2. "Syria: Governorates, Major Cities & Localities - Population Statistics in Maps and Charts".
  3. Zwaan, Irene de (7 April 2014). "Pater Frans van der Lugt doodgeschoten in Homs - Burgeroorlog in Syrië - VK" (in nl). de Volkskrant. http://www.volkskrant.nl/vk/nl/13828/Burgeroorlog-in-Syrie/article/detail/3630277/2014/04/07/Pater-Frans-van-der-Lugt-doodgeschoten-in-Homs.dhtml. பார்த்த நாள்: 7 April 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோம்ஸ்_ஆளுநரகம்&oldid=3085563" இலிருந்து மீள்விக்கப்பட்டது