ஹேம் சந்திர கோஸ்வாமி (கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேம் சந்திர கோஸ்வாமி
பிறப்புமார்ச்சு 1, 1958 (1958-03-01) (அகவை 66)
மஜூலி மாவட்டம், அசாம், இந்தியா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுகலைஞர், முகமூடித் தயாரிப்பாளர்
விருதுகள்பத்மசிறீ (2023)

ஹேம் சந்திர கோஸ்வாமி (Hem Chandra Goswami) (பிறப்பு மார்ச் 1, 1958) அசாமின் மஜூலி மாவட்டத்தைச் சேர்ந்த முகமூடி தயாரிக்கும் கலைஞர் ஆவார். [1] [2] கலைத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக 2023 இல் இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன்களின் விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார். [3] [4]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

மார்ச் 1, 1958 இல் பிறந்த கோஸ்வாமி உள்ளூர் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் அசாமின் குவகாத்தியில் உள்ள கலை மற்றும் கைவினை சங்கத்தில் கலை மற்றும் கைவினைப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். [5]

10 வயதில், ஸ்ரீமாதா சங்கர்தேவ் என்பவர் நிறுவிய கலைப் பள்ளியில் தனது பயிற்சியைத் தொடங்கினார். கலைஞரும் முகமூடி தயாரிப்பாளருமான இவரது தந்தை ருத்ரகாந்த தேவ கோஸ்வாமியின் வழிகாட்டுதலின் கீழ், சிறு வயதிலிருந்தே தனது கைவினைப்பொருளை மெருகேற்றினார்.

டிப்ருகட் பல்கலைக்கழகம், தேஜ்பூர் பல்கலைக்கழகம், கவுகாத்தி, விவேகானந்த கேந்திரா, புது தில்லி, இந்திரா காந்தி கலாச்சார மையம் மற்றும் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் மூங்கில்களைப் பயன்படுத்தி முகமூடியைத் தயாரித்த வரலாறு குறித்து கோஸ்வாமி விரிவுரைகளை வழங்கியுள்ளார்.[6]

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

சான்றுகள்[தொகு]