உள்ளடக்கத்துக்குச் செல்

தேஜ்பூர் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 26°41′47.544″N 92°50′6.09″E / 26.69654000°N 92.8350250°E / 26.69654000; 92.8350250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேஜ்பூர் பல்கலைக்கழகம்
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
சிறப்பு அறிவு படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது
வகைமத்தியப் பல்கலக்கழகம்
உருவாக்கம்21 சனவரி 1994
(30 ஆண்டுகள் முன்னர்)
 (1994-01-21)
வேந்தர்அசாம் ஆளுநர் [1]
துணை வேந்தர்வினோத் குமார் ஜெயின்[2]
அமைவிடம்,
இந்தியா

26°41′47.544″N 92°50′6.09″E / 26.69654000°N 92.8350250°E / 26.69654000; 92.8350250
நிறங்கள்        
இணையதளம்www.tezu.ac.in
தேஜ்பூர் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடம்

தேஜ்பூர் மத்தியப் பல்கலைக்கழகம் (Tezpur University) இந்தியாவின் 54 மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது 262 ஏக்கர் பரப்பளவில், அசாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜ்பூர் நகரத்திற்கு கிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது 21 சனவரி 1994 முதல் செயல்படுகிறது.[3]

மாணவர் சேர்க்கை

[தொகு]

2020 தேசியக் கல்விக் கொள்கையின்படி 2022 - 2023 கல்வி ஆண்டிலிருந்து மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலம் இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்கை நடத்தப்படுகிறது.[4]

வழங்கும் படிப்புகள்

[தொகு]

தேஜ்பூர் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியலில் உள்ள நான்கு துறைகளில் 27 வகையான படிப்புகள் வழங்குகிறது.

துறைகள்

[தொகு]
  • அறிவியல் துறை
  • மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை
  • மேலாண்மை துறை
  • பொறியியல் துறை

அறிவியல் துறை படிப்புகள்

[தொகு]

அறிவியல் துறையில் ஆறுவகையான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் கொண்டுள்ளது.

  • வேதியல் படிப்புகள்
  • கணிதவியல் படிப்புகள்
  • உயிரியல் மற்றும் உயிர்தொழில்நுட்பப் படிப்புகள்
  • மருந்தியல் படிப்புகள்
  • இயற்பியல் படிப்புகள்
  • சூழலியல் அறிவியல் படிப்புகள்

மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை படிப்புகள்

[தொகு]

இத்துறையில் பட்டய, இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகள் வழங்குகிறது.

  • அசாமிய மொழி
  • பண்பாட்டுப் படிப்புகள்
  • ஆங்கில மொழி
  • இந்தி மொழி
  • வெளிநாட்டு மொழிகள்
  • மக்கள் தொடர்பு மற்றும் இதழியல்
  • சமூகவியல்
  • சமூகப் பணி
  • கல்வியியல்
  • சட்டப் படிப்புகள்
  • மேலாண்மைக் கல்வியில் வணிக நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் வணிகப் படிப்புகள்

பொறியியல் துறை படிப்புகள்

[தொகு]

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப்ப படிப்புகள் வழங்குகிறது. [5]

  • கணினி அறிவியல் & பொறியியல்
  • வடிவமைப்பு பொறியல்
  • மின பொறியியல்
  • மின்னணு & தகவல் தொடர்பு பொறியியல்
  • இயந்திரப் பொறியியல்
  • உணவுப் பொறியியல் & தொழில்நுட்பம்
  • கட்டிடப் பொறியல்
  • எரிசக்தி பொறியியல்
  • பயன்பாட்டு அறிவியல் (Applied Sciences)

மையங்கள் மற்றும் நுண் குழுக்கள்

[தொகு]
மையங்கள்
  • அழிவில் உள்ள மொழிகளை வளர்க்கும் மையம் (Centre for Endangered Languages)
  • பன்னோக்கு ஆய்வு மையம்
  • கற்பித்தல் & கற்றல் மையம்
  • புதுமை வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மையம்
  • மகளிர் படிப்புகள் மையம்
  • உள்ளடக்கிய வளர்ச்சிக்கான மையம்
நுண் குழுக்கள்
  • ஆய்வு & வளர்ச்சிக் குழு (R & D)
  • அறிவுசார் சொத்துரிமை குழு
  • DBT நோடல் மையம் [6]
  • ஒ என் ஜி சி க்கான பெட்ரேலிய உயிர்தொழில் நுட்ப மையம்
  • உயிர் தகவலியல் உள்கட்டமைப்பு வசதி (Bioinformatics Infrastructure Facility)
  • நிறுவன பயோடெக் முனையம் Institutional Biotech Hub)
  • உள் தர உறுதிப் பிரிவு (Internal Quality Assurance Cell)

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chancellor, Tezpur University, INDIA". பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
  2. ex-professor Vinod Kumar Jain appointed as Tezpur University VC[தொடர்பிழந்த இணைப்பு] Retrieved on 16 February 2018.
  3. "Act. No. 45, 1: The Tezpur University Act, 1993". பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
  4. CUET in July for UG admissions to central universities, Class 12 marks won’t count
  5. "List of Participating Institutes" (PDF). Central Counselling Board. 9 June 2011. Archived from the original (PDF) on 26 June 2011. பார்க்கப்பட்ட நாள் 15 June 2011.
  6. DBT Nodal Centre

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tezpur University
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜ்பூர்_பல்கலைக்கழகம்&oldid=3710937" இலிருந்து மீள்விக்கப்பட்டது