ஹெர்மன் ஓல்டென்பர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹெர்மன் ஓல்டென்பர்க்
பிறப்பு31 அக்டோபர் 1854
ஆம்பர்கு
இறப்பு18 மார்ச் 1920 (அகவை 65)
கோட்டிங்கென்
பணிஇந்தியவியலாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், வரலாற்றாசிரியர்

ஹெர்மன் ஓல்டென்பர்க் (Hermann Oldenberg) (1854 - 1920) ஒரு ஜெர்மானிய இந்தியவியல் அறிஞர் ஆவார். 1881 இல், பாளி மொழி நூல்களை ஆதாரமாக வைத்து புத்தர் பற்றி இவர் எழுதிய ஆய்வு நூல் பௌத்த சமயத்தை ஐரோப்பிய அறிஞர்கள் இடையே பிரபலப்படுத்தியது. இந்நூல் முதல் வெளியீட்டிலிருந்து இன்றுவரை தொடர்ந்து பதிப்பில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. டி. டபுள்யூ. ரைஸ் டேவிட்ஸ் (T. W. Rhys Davids) என்பவருடன் சேர்ந்து, பௌத்த சமயம் சார்ந்த ஒழுக்க நூலான வினய என்பதை மூன்று தொகுதிகளாக வெளியிட்டார். இவர் மொழிபெயர்த்த கிருகசூத்திரம் என்னும் நூல் இரண்டு தொகுதிகளாகவும், வேத சுலோகங்கள் இரு தொகுதிகளாகவும், மாக்ஸ் முல்லரால் தொகுக்கப்பட்ட கீழைப் புனித நூல்கள் (Sacred Books of the East) என்னும் பெரிய நூற் தொகுதியில் இடம்பெற்றன. 1888இல் இவர் எழுதிய புரோலெகோமெனாவின் (Prolegomena) மூலம், ரிக் வேதத்தின் மொழியியல் ஆய்வுக்கான அடிப்படைகளை உருவாக்கினார்.