பேச்சு:ஹெர்மன் ஓல்டென்பர்க்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரபலம் (famous,popular), பிரபலப்படுத்தப்பட்டது (popularised)- ஒற்றைத் தமிழ்ச் சொல்லில் சொல்ல இயலுமா?--Ravidreams 21:46, 4 மார்ச் 2007 (UTC)

புகழ், புகழடைந்தது, புகழ்பெற்றது. புகல் என்றால் சொல் (வினை). அதில் இருந்து புகல் = fame, renown. புகழ் என்பது பெருஞ்சிறப்பு பெற்ற புகல் ஆகும். ழகரம் சிறப்பு, பெருமை முதலிய நோக்கி வருவது (பெரும்பாலும்).

புகல் > புகல்வு, புகற்சி என்னும் சொற்களும் உண்டு. அவை விருப்பம், காதல், பெருமை என்னும் பொருட்களில் வருவன. பரவலாக அறியப்படுவது புகல். அதுவே பெரும் புகலாக இருந்தால் புகழ். எனவே famous, popular என்பதற்கு புகல், பரவலம் என கூறலாம். popularised என்பதற்கு பரவலமாக்கப்பட்டது, புகலூட்டப்பட்டது, புகலேற்றப்பட்டது. புகழேற்றப்பட்டது என்பது பொருந்தாது. புகழ் என்பது தானே எய்தும் செஞ்சிறப்பு. --செல்வா 22:03, 4 மார்ச் 2007 (UTC)

புகல் என்ற சொல்லை இப்படி பயன்படுத்தலாம் இன்று தான் அறிந்தேன். விளக்கத்துக்கு நன்றி, செல்வா. பரவல் என்பதிலிருந்து பரவலமாக்கப்பட்டது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலலாம் என்று நினைக்கிறேன். அதையே பயன்படுத்துகிறேன்--Ravidreams 22:42, 4 மார்ச் 2007 (UTC)