ஹெக்டர் பேர்லியோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெக்டர் பேர்லியோஸ்
பிறப்பு11 திசம்பர் 1803
La Côte-Saint-André
இறப்பு8 மார்ச்சு 1869 (அகவை 65)
பாரிசு
பணிபத்திரிக்கையாளர், இசை நடத்துநர், எழுத்தாளர், music critic, virtuoso, நூலகர், இசையமைப்பாளர்
சிறப்புப் பணிகள்See list of compositions by Hector Berlioz
விருதுகள்Officer of the Legion of Honour, Knight of the Legion of Honour
இணையம்http://www.hberlioz.com/
கையெழுத்து
பாரிசைச் சேர்ந்த பிராங்க் என்பவரால் எடுக்கப்பட்ட பேர்லியோசின் ஒளிப்படம். 1855.

லூயி ஹெக்டர் பேர்லியோஸ் (Louis Hector Berlioz - டிசம்பர் 11, 1803 – மார்ச் 8, 1869) ஒரு பிரெஞ்சு புனைவிய இசையமைப்பாளர். மேலைத் தேய இசைக் கருவிகள் பற்றி இவர் எழுதிய "இசைக் கருவிகள் பற்றிய நூல்" (Grand Traité d’Instrumentation et d’Orchestration Modernes) என்னும் ஆய்வு நூல் மூலம் நவீன குழுஇசைக்குப் (orchestra) பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். முழுஇசை நடத்துனராக இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களை வைத்துப் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இன்னொரு முனையில், வெறும் வாய்ப்பாட்டு, பியானோ போன்றவற்றுக்காகவும் 50 அளவிலான பாடல்களுக்கு இசையமைப்புச் செய்துள்ளார்.

வரலாறு[தொகு]

பேர்லியோஸ் பிரான்ஸ் நாட்டில், இசேயர் (Isère) பிரிவில், லையன் (Lyon) என்னும் இடத்துக்கு அண்மையில் உள்ள லா கோட்-சான் ஆண்ட்ரே (La Côte-Saint-André) என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை மாகாண மருத்துவரும், அறிஞரும் ஆவார். இளம் வயதில் பேர்லியோசின் கல்வி பெரும்பாலும் இவர் மூலமே கிடைத்தது. தந்தை தாராண்மை நோக்குக் கொண்ட ஒரு இறைமறுப்பாளர். தாயார் பழமைவாத ரோமன் கத்தோலிக்கர். இவருடன் சேர்த்துக் குடும்பத்தில் ஆறு பிள்ளைகள் பிறந்தாலும் மூவர் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். ஏனைய இருவரான நான்சியும், அடேலும் வாழ்க்கை முழுதும் ஹெக்டருக்கு நெருக்கமானவர்களாகவே இருந்தனர்.

அக்காலத்து இசையமைப்பாளர்கள் பலர் இளவயது மேதைகளாக இருந்தனர். ஆனால் பேர்லியோஸ் அவ்வாறானவர் அல்ல. தனது 12 ஆவது வயதிலேயே இவர் இசை கற்கத் தொடங்கினார். இவரது தந்தை விரும்பாததால் இவர் பியானோ கற்றுக்கொள்ளவில்லை. இதில் நன்மை தீமை இரண்டும் கலந்திருந்ததாக பேர்லியோஸ் பிற்காலத்தில் குறிப்பிட்டுள்ளார். இவர் கிட்டார், புல்லாங்குழல் ஆகியவற்றைக் கற்றுத் திறமையுள்ளவர் ஆனார். இசையமைப்புக்களுக்கு இன்றியமையாத சுர இயைபுகள் (harmony) பற்றிய அறிவை இவர் நூல்களை வாசிப்பதன் மூலம் அறிந்துகொண்டாரே அன்றி முறையான பயிற்சி பெறவில்லை. இவரது தொடக்ககால இசையமைப்புக்களிற் பெரும்பாலானவை குறைவான எண்ணிக்கை கொண்ட இசைக்கலைஞர்களைக் கொண்டவையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெக்டர்_பேர்லியோஸ்&oldid=2733758" இலிருந்து மீள்விக்கப்பட்டது