ஹுவா முலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹுவா முலான்(மரபுவழிச் சீனம்: 花木蘭)
கேதரிங் ஜெம்ஸ் ஆஃப் பியூட்டி ஆல்பத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள முலான் (畫麗珠萃秀)
உருவாக்கியவர் குவோ மாவாகியன்
தகவல்
பால்பெண்
தொழில்காலாட்படை வீரர்
தேசிய இனம்சியான்பே அல்லது சீனம் (முடிவானது அல்ல)

ஹுவா முலான் (Hua Mulan, சீன மொழி : 花木蘭) என்பவர் சீன வரலாற்றின் வடக்கு மற்றும் தெற்கு வம்ச காலத்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற / கற்பனையான பெண் போர்வீரர் ஆவார். இவர் குறித்து முதலில் பாலட் ஆப் முலானில் ( Chinese ) குறிப்பிடபட்டுள்ளது. பாலாட்டில் குறிப்பிடப்படும், ஹுவா முலான், ஒரு ஆணாக வேடமிட்டு, தனது வயதான தந்தைக்கு பதிலாக இராணுவத்தில் இணைகிறாள். பன்னிரண்டு ஆண்டுகள் படையில் போர்புரிந்து உயர் தகுதியைப் பெற்றார், ஆனால் அவள் தனக்கு வரும் வெகுமதியையும் மறுத்துவிட்டு தனது சொந்த ஊருக்கு வந்து ஓய்வு கொள்கிறாள்.

பாலட் ஆப் ஹுவா முலான் வரலாற்றானது வடக்கு லீ பேரரசு காலத்தில் அமைந்ததாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மிங் வம்சத்தைச் சேர்ந்த சூ வெய் நாடகம் அவளை வடக்கு லீ பேரரசு காலத்தவளாக சித்தரிக்கிறது. [1]

வெள்ளி கோளில் உள்ள ஹுவா முலான் பள்ளம் என்ற பெயரானது இவளது பெயரில் இடப்பட்டது. [2] [3]

வரலாறு[தொகு]

18 ஆம் நூற்றாண்டய ஹுவா முலானின் ஓவியம் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது

முலானின் பாலாட் பற்றி முதன்முதலில் 6 ஆம் நூற்றாண்டய பழைய மற்றும் புதிய இசைப் பதிவு நூல்களில் குறிப்பிடபட்டுள்ளது. கவிதையின் ஆரம்பகால உரை 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டின் மியூசிக் பீரோ சேகரிப்பு என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் குவோ மாவாகியன், பழைய மற்றும் புதிய இசை பதிவுகளை கவிதையின் ஆதாரமாக குறிப்பிடுகிறார்.

மிங் அரசமரபின் பிற்காலத்தில், நாடக ஆசிரியர் சூ வீ (இறப்பு. 1593) இந்த கதையை "பெண் முலான் 雌木蘭 " ( 雌木蘭 அல்லது, இன்னும் முழுமையாகச் சொன்னால், "கதாநாயகி முலான் தனது தந்தைக்காக போருக்குச் செல்கிறாள்" ( சீன மொழி: 雌木蘭替父從軍 ), என்று நாடகமாக்கினார்.

பின்னர், முலானின் கதாபாத்திரம் சிங் வம்சத்தின் ஆரம்பத்தில், 17 ஆம் நூற்றாண்டில் சூ ரென்ஹுவோ எழுதிய வரலாற்று புதினமான சுய்-டாங் ரொமான்ஸ் இல் இணைக்கப்பட்டது. [4] [5]   [ zh ] காலப்போக்கில், ஹுவா முலானின் கதையானது சீன மக்களிடையே ஒரு நாட்டுப்புறக் கதையாக பிரபலமடைந்தது.   [ மேற்கோள் தேவை ]

வரலாற்றுத்தன்மை[தொகு]

முலானின் கதையில் வரலாற்று பாத்திரத்தைவிட தொன்மக் கதையே மேலோங்கி உள்ளது. [6] இருப்பினும், இவளது தொன்மக்கதையானது யான் சியுவானின் ஒரு நூறு அழகிகள் கதையில் சேர்க்கப்பட்டுள்ளது, இது சீன நாட்டுப்புற கதைகளில் உள்ள பல்வேறு பெண்கள் குறித்த தொகுப்பாகும்.

கதைச்சுருக்கம்[தொகு]

சீனாவின் சின்க்சியாங் நகரில் உள்ள, முலான் சிலை.

த பாலட் ஆப் ஹுவா முலான் கதையானது வடக்கு வீ பேரரசு காலத்தைக் (386–536) களமாக கொண்டுள்ளது. ரூரான் படையெடுப்பாளர்களிடமிருந்து துயோபா சாம்ராஜ்யத்தை பாதுகாக்க ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு ஆண் இராணுவத்தில் கட்டாயம் சேரவேண்டும் என்று அழைக்கப்படுவதால், முலான் தனது தறியில் கவலையுடன் அமர்ந்திருப்பதாக இந்த கவிதை தொடங்குகிறது. இவளுடைய தந்தை தள்ளாடும் வயோதிகர், இவளுடைய தம்பி சிறுவனாக இருக்கிறான். எனவே இவள் தனது தந்தைக்கு பதிலாக ஆண் வேடத்தில் படையில் இணைய முடிவுசெய்து, தன்னுடைய பெற்றோரிடமிருந்து விடைபெறுகிறாள். இவள் ஏற்கனவே சண்டையிடுவதில் திறமையானவள், இராணுவத்தில் சேர்ந்த இவளுக்கு தற்காப்பு கலைகள், வாள் சண்டை, வில்வித்தை போன்றவை கற்பிக்கப்படுகின்றன. பன்னிரண்டு வருட போருக்குப் பிறகு, இராணுவத்தில் திரும்பி வந்து வீரர்களுக்கு வெகுமதி அளிக்கப்படுகின்றன. முலான் தனக்கு தரப்படும் அதிகாரப்பூர்வ பதவியை நிராகரிக்கிறாள். ஒட்டகத்தை மட்டும் தனது வீட்டிற்கு கொண்டு செல்ல கேட்கிறாள். இவளை குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். முலான் தனது பழைய ஆடைகளை அணிந்துகொண்டு தனது தோழர்களைச் சந்திக்கிறாள். அவர்கள் தங்களுடன் இணைந்து 12 ஆண்டுகள் பணியாற்றியவளை, ஒரு பெண் என்று தங்களால் உணரமுடியவில்லையே என்று அதிர்ச்சியடைகின்றனர். [7]

நவீன தழுவல்கள்[தொகு]

ஹுவா முலானின் கதையைத் தழுவி பல திரைப்படங்கள் மற்றும் மேடை நடகங்கள் எடுக்கபட்டுள்ளன.

குறிப்புகள்[தொகு]

  1. Kwa & Idema 2010
  2. Russell, Joel F., Schaber, Gerald G. (March 1993). "Named Venusian craters". In Lunar and Planetary Inst., Twenty-Fourth Lunar and Planetary Science Conference. Bibcode: 1993LPI....24.1219R. 
  3. "Venus Crater Database". Lunar and Planetary Institute of the Universities Space Research Association. 2011-05-06 அன்று பார்க்கப்பட்டது.
  4. Kwa & Idema 2010
  5. Huang 2006
  6. Mann, Susan. Precious Records: Women in China's Long Eighteenth Century. Stanford University Press; 1 edition (May 1, 1997). p. 208. ISBN 978-0804727440
  7. "The Legendary Warrior that Inspired Disney's Mulan Is Pretty Badass". Archived from the original on 2016-12-11. https://web.archive.org/web/20161211233838/http://moviepilot.com/posts/2826859. பார்த்த நாள்: 2016-12-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுவா_முலான்&oldid=2944193" இருந்து மீள்விக்கப்பட்டது