சியான்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு சியான்பே வில்லாளியை சித்தரிக்கும் ஓவியம்
சியான்பே மாநிலம் (1-3 ஆம் நூற்றாண்டுகள்).

சியான்பே என்பவர்கள் தற்கால மங்கோலியா, உள் மங்கோலியா மற்றும் வட கிழக்கு சீனாவின் கிழக்கு ஐரோவாசிய புல்வெளிகளில் வாழ்ந்த பழங்கால நாடோடி மக்கள் ஆவர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் டொங்கு மக்கள் சியோங்னு மக்களால் தோற்கடிக்கப்பட்ட போது அவர்கள் உஹுவான் மற்றும் சியான்பே என்று இரு குழுக்களாக பிரிந்தனர். சியோங்னுவின் சன்யு யூலியுவை கி. பி. 87 இல் கொன்று முக்கியத்துவம் பெறும் வரை அவர்கள் பெரிய நாடோடி சக்திகள் மற்றும் ஆன் அரசமரபுக்கு துணை அரசாகவே இருந்தனர். சியோங்னுவை போல் இல்லாமல் சியான்பே அரசியலமைப்பானது நாடோடி மக்களாக, தங்களது காலங்களில் சீனர்களுக்கு ஒரு கருத்தொருமித்த சவாலை கொடுப்பதற்கான அமைப்பை கொண்டிருக்காமல் இருந்தது. மூன்று ராஜ்யங்களின் காலத்தில் பல்வேறு தோல்விகளை சந்தித்த பிறகு சியான்பே தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து சீன சமூகத்திற்கு அருகில் வாழத் தொடங்கினர். ஐந்து காட்டுமிராண்டிகளில் ஒருவராக அவர்கள், ஐந்து காட்டுமிராண்டிகளின் எழுச்சியில் பங்கேற்று வடக்கு வெயி போன்ற தங்களுக்கென சொந்தமான நிலங்களை சீனாவில் ஏற்படுத்தினர். இந்த மாநிலங்கள் சீனமயமாக்கலை எதிர்த்தும் ஆதரித்தும் பல்வேறு சமயங்களில் வந்தன. ஆனால் கடைசியில் தாங் அரசமரபின் காலத்தில் பொதுவான சீன மக்கள் தொகையுடன் இணைந்து விட்டன.[1][2][3][1][4][2][5][6]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியான்பே&oldid=3574557" இருந்து மீள்விக்கப்பட்டது