ஹான்ஸ் கிராஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹான்ஸ் குஸ்டாவ் அடால்ஃப் கிராஸ் (டிசம்பர் 12, 1847, க்ராஸ் - டிசம்பர் 9, 1915, க்ராஸ்) ஒரு ஆஸ்திரிய குற்றவியல் நீதிபதியும், நீதிபதி ஆய்வாளராவாா். இவர் குற்றவியல் துறையை உருவாக்கியவர் என்று நம்பப்படுகிறது மற்றும் குற்றவியல் புலன்விசாரணையின்  தந்தை எனவும் இன்றும் அறியப்படுகிறாா். இவர் சொ்னிவிட்ஸி  பல்கலைக்கழகத்திலும் , பிராகா பல்கலைக்கழகத்திலும் மற்றும் க்ராஸ் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பயிற்றுவித்தவர். இவர் ஆஸ்திரிய உளவியலாளர் ஓட்டோ கிராஸின் தந்தையும் ஆவார்.

1893 ஆம் ஆண்டில் அவரது புத்தகமான ஹேண்ட்புச் ஃபர் அட்ரெருசுங்ஸ்குர்ச்சர், பொலிஸிபிபேட், ஜெண்டர்மன் (நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், இராணுவ காவல்துறையினருக்கான கையேடு)  என்ற கையேடு வெளியானது. இது குற்றவியல் துறையின் உருவாக்கத்தை  குறிப்பதாக அமைந்தது.  முன்னர் ஒருங்கிணைக்கப்படாத அறிவாா்ந்தத்  துறைகளான உளவியல் மற்றும் விஞ்ஞானம் போன்றவற்றை ஒருங்கிணைந்த பணி ஆகும், இதனை  குற்றத்திற்கு எதிராக வெற்றிகரமாக பயன்படுத்த முடியும். குற்றம் நடைபெற்ற காட்சி புகைப்படம் போன்ற சில துறைகளை குற்றவியல் விசாரணையின் தேவைகளுக்காக எடுத்துக்கொண்டாா் . 1912 ஆம் ஆண்டில்,  க்ராஸ் 'லா ஸ்கூல் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக,  குற்றவியல் நிறுவனத்தை(பின்னர்: குற்றவியல் ஆய்வு நிறுவனம் என அழைக்கப்பட்டது) நிறுவினாா். இதைத் தொடா்ந்து உலகெங்கிலும் இதற்கு ஒத்த பல நிறுவனங்கள் உருவாக தொடங்கின.

மேற்கோள்கள்[தொகு]

  • Handbuch für Untersuchungsrichter als System der Kriminalistik (Handbook for Examining Magistrates as a System of Criminalistics), 1891.
  • Kriminalpsychologie (Criminal Psychology), 1898.
  • Enzyklopädie der Kriminalistik (Encyclopedia of Criminology), 1901.
  • Die Erforschung des Sachverhalts strafbarer Handlungen (The Investigation of the Circumstances of Crimes).

இலக்கியம்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹான்ஸ்_கிராஸ்&oldid=3703634" இலிருந்து மீள்விக்கப்பட்டது