ஹவ்காங் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹவ்காங் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்குப் பகுதியில் ஹவ்காங் பகுதி மக்களுக்குப் பயன்படுகிறது. வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது பதிமூன்றாவது தொடருந்து நிலையமாகும். இது புவாங்கோக் தொடருந்து நிலையம் மற்றும் கோவன் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் பொங்கோல் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]