உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
துரிதக் கடவு ரயில்
大众快速交通 (地铁)
Sistem Pengangkutan Gerak Cepat
Mass Rapid Transit (MRT)
தகவல்
உரிமையாளர்நில போக்குவரத்து ஆணையம்
அமைவிடம்சிங்கப்பூர்
போக்குவரத்து
வகை
துரிதக் கடவு
மொத்தப் பாதைகள்5
நிலையங்களின்
எண்ணிக்கை
147[1]
பயணியர் (ஒரு நாளைக்கு)3.2 மில்லியன் (2016)[2]
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
7 நவம்பர் 1987
இயக்குனர்(கள்)எஸ் எம் ஆர் டி நிறுவனம்
எஸ் பி எஸ் நிறுவனம்
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்129.7 km (80.59 mi)
இருப்புபாதை அகலம்1,435 மிமீ (4 அடி 8 12 அங்) Standard gauge

சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில் சேவை உலகின் சிறந்த துரிதக் கடவு ரயில் சேவையாக பல முறை விருதுகள் வாங்கிய ரயில் நிறுவனமாகும். இது தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாம் பழமையான துரிதக் கடவு ரயில் சேவையாகும். தினமும் 3.2 மில்லியன் மக்களை.[2] நாட்டின் பல இடங்களுக்கு எடுத்து செல்லும் இந்த சேவையானது 1987 ஆம் ஆண்டு முதல் இங்கு இயங்கி வருகிறது .மொத்தம் 147[1] தொடருந்து நிலையங்களையும், 129.7 கிலோமீட்டர் நீள தண்டவாளங்களையும் கொண்டது இந்த ரயில் சேவை. சிங்கப்பூர் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நில போக்குவரத்து ஆணையம் இந்த வழித்தடங்களை இடுகிறது. காலை 5.30 மணி முதல், இரவு 1 மணி வரை இந்த சேவை தடையின்றி நடந்து வருகிறது. விழாக்காலங்களில் இந்த சேவை அதிக நேரத்திற்கு நீட்டிக்கப் படுகிறது[3].

வரலாறு

[தொகு]

1967 ஆண்டில்[4][5] இருந்து சிங்கபூரின் வளர்ச்சி பற்றி ஆய்வுகள் மேற்கொண்ட நிருவனகளின் அறிவுரையின் படி சிங்கபூர் பேருந்துகளை மட்டுமே சார்ந்து இருப்பது உகந்தது அல்ல என்றும், வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் சிறிய நாடாக இருக்கும் காரணம் போன்றவற்றை மனதில் கொண்டு சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் முடிவாக, அந்நாட்டின் வரலாற்றிலேயே அதிகபட்ச நிதி ஓதிக்கீட்டுத் தொகையாக 5 பில்லியன் வெள்ளியில் இந்த திட்டம் தொடங்கியது.[6][7]. 1983 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகளை தொடங்கி, நவம்பர் 7, 1987 அன்று, யோ சூ காங் மற்றும் தோ பா யோ இடையே ரயில் சேவை தொடங்கியது. வடக்கு தெற்கு வழித்தடங்களில் 5 நிலையங்களுடன் இந்த சேவை நடைபெற்றது. பின்னர் 1988 ஆம் ஆண்டு மேலும் 15 நிலையங்கள் இதனுடன் இணைக்கப் பட்டது. எதிர்பார்த்ததை விட இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, அதாவது 1990ஆம் ஆண்டு 21 நிலையங்களுடன் இந்த வழித்தடம் முழுவதுமாக கட்டி முடிக்கப் பட்டது .

தற்போதைய நிலை

[தொகு]

பின் வந்த ஆண்டுகளில் படிப்படியாக மற்ற வழித்தடங்களும் கட்டப்பட்டு தற்பொழுது மொத்தமாக 72 ரயில் நிலையங்களுடன் பெரும் நிறுவனமாக தன சேவையை செய்து வருகிறது .

வழித்தடம்
(நடத்தும் நிறுவனம்)
சேவையை தொடங்கையல் காலம் தொடருந்து நிலையங்கள் நீளம்
(கிமீ)
முனையம் பணிமனை
வடக்கு தெற்கு
(எஸ் எம் ஆர் டி)
7 நவம்பர் 1987 27 45 ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் மரீனா பே ரயில் நிலையம் பிசான்
உழு பண்டான்
கிழக்கு மேற்கு
(எஸ் எம் ஆர் டி)
12 திசம்பர் 1987 33 53.2 பாசிர் ரிஸ் ரயில் நிலையம் ஜூ கூன் ரயில் நிலையம் உழு பண்டான்
சாங்கி
10 சனவரி 2001 2 தானா மேரா ரயில் நிலையம் சாங்கி விமானநிலையம் ரயில் நிலையம்
வடக்கு கிழக்கு
(எஸ் பி எஸ்)
20 சூன் 2003 16 20 துறைமுகம் ரயில் நிலையம் பொங்கோல் ரயில் நிலையம் செங்காங்
வட்டம்
(எஸ் எம் ஆர் டி)
28 மே 2009 30 42.5 டோபி காட் ரயில் நிலையம் மேரிமவுண்ட் ரயில் நிலையம் கிம் சுஆன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Singapore MRT". Explore Singapore's "MRTpedia". பார்க்கப்பட்ட நாள் 18 April 2010.
  2. 2.0 2.1 "Straits Times: Average Daily Ridership" (PDF). Straits Times. பார்க்கப்பட்ட நாள் 2010-02-20.
  3. "Train, bus runs". The Straits Times. 24 திசம்பர் 2007. 
  4. Sharp 2005, pg. 66
  5. Fwa Tien Fang (4 September 2004) (PDF). Sustainable Urban Transportation Planning and Development — Issues and Challenges for Singapore. Department of Civil Engineering, National University of Singapore. http://soc2apc.wikispaces.com/file/view/Issues+and+challenges+for+Singapore,+sustainable+transport+planning+and+development.pdf. பார்த்த நாள்: 2008-12-18. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "1982 - The Year Work Began". Land Transport Authority. Archived from the original on 2011-06-05. பார்க்கப்பட்ட நாள் 2005-12-07.
  7. Lee Siew Hoon & Chandra Mohan. "In Memoriam - Ong Teng Cheong : A Profile". Channel NewsAsia. Archived from the original on 2002-02-23. பார்க்கப்பட்ட நாள் 2007-11-26.