வடக்கு கிழக்கு வழித்தடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வடக்கு கிழக்கு வழித்தடம் சிங்கப்பூர் துரிதக் கடவு சேவையின் மூன்றாவது வழித்தடமாகும். இதுவே உலகின் இரண்டாவது நீளமான சுரங்க தானியங்கி வலித்தடமாகும்[1]. தற்பொழுது இத்தடத்தின் நீளம் 20 கிலோமீட்டர். இதன் தொடக்க நிலையத்தில் இருந்து கடைசி நிலையம் செல்ல 32 நிமிடங்கள் ஆகின்றது.[2]. இந்த வழித்தடத்தின் நிறம் செவ்வூதா ஆகும். இந்த தடத்தின் சேவையை எஸ் பி எஸ் வழங்குகிறது.

இதன் பெயர் காட்டுவது போல், இந்த வழித்தடம் சிங்கப்பூரின் வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்கிறது.இடையில் டோபி காட் ரயில் நிலையத்தில், வடக்கு தெற்கு வழித்தடம் உடனான சந்திப்பு உள்ளது.கிழக்கு மேற்கு வழித்தடம் உடனான சந்திப்பு ஊட்ரம் பார்க் ரயில் நிலையத்தில் உள்ளது.வட்டப்பாதை வழித்தடத்திற்கு மாற விரும்புவோர், டோபி காட் மற்றும் சிராங்கூன் ஆகியவற்றில் உள்ள சந்திப்புகளை பயன்படுத்தலாம்.


மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]