ஹரி கிருஷ்ண கோனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹரி கிருஷ்ண கோனார்

Hare Krishna Konar.jpg

அமைச்சர், நிலச்சீர்திருத்த சிற்பி
தொகுதி கல்னா
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 5 1915
இறப்பு 23 சூலை 1974
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழ்க்கை துணைவர்(கள்) கல்யாணமானவர்
பிள்ளைகள் ஒரு மகன்
சமயம் இறைமறுப்பு

ஹரி கிருஷ்ண கோனார் (ஆகத்து 5 , 1915 - சூலை 23, 1974 ) ,இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தை சேர்ந்த அரசியல்வாதி ஆவார் . இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியை சேர்ந்த இவர் , அம்மாநிலத்தில் நிலச்சீர்திருத்தத்தை வடிவமைத்த சிற்பியாக கருதப்படுகிறார் .

பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஆகத்து 5 , 1915 தேதி மேற்குவங்க மாநிலம், பர்துவான் மாவட்டம் கமர்காரியா எனும் கிராமத்தில் சரத் சந்திர கோனார் – சத்யபால் தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் .ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே இந்திய விடுதலைப் போராட்டத்தில் எழுச்சிமிக்க இயக்கங்களில் ஒன்றான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தக் குற்றத்திற்காக ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.விடுதலையாகி தொடர்ந்து நாட்டு விடுதலைப் போராட்டத்திலும், இவருடைய புரட்சிகரமான அரசியல் பணி காரணமாகவும் ஆங்கிலேய அரசால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த கொடுஞ் சிறையிலிருந்து 1938ம் ஆண்டு விடுதலையான பின்னர் , அவர் இந்திய பொதுவுடமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு குறிப்பாக பர்துவான் மாவட்டத்தில் விவசாயிகளை அணிதிரட்டுவதில் ஈடுபடுத்திக் கொண்டார்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

கல்னா தொகுதியில் இருந்து 1957, 1962, 1967, 1969 and 1971ஆம் ஆண்டுகளில் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .[2] மேற்கு வங்க மாநிலத்தில் 1967ல் முதல் ஐக்கிய முன்னணி அரசு பதவியேற்றது. இதில் நிலம் மற்றும் நிலவருவாய்த்துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு 1969ம் ஆண்டு மதுரையில் நடைபெற்றபோது அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு மரணம் வரை அப்பொறுப்பில் பணியாற்றினார்.[3]

நிலச்சீர்திருத்தங்கள்[தொகு]

அவர் அமைச்சராக இருந்த காலத்தில்

  1. அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை நிலமற்றோருக்கு விநியோகிப்பது.
  2. உபரி நிலங்களை கைப்பற்றி விநியோகித்தது.
  3. பினாமி நிலங்களை கண்டறிந்து நிலமற்றோருக்கு உரிமையாக்கியது
  4. குத்தகை விவசாயிகளின் சாகுபடி உரிமையைப் பாதுகாத்தது
  5. சொந்தமாக வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்கியது.[3]

இவையே பிற்காலத்தில் இடது முன்னணி அரசின் அடிநாதமாக அமைந்தன .[4]

இறப்பு[தொகு]

1974ம் ஆண்டு சூலை 23 அன்று புற்று நோய்க்கு பலியானார் .

மேற்கோள்கள்[தொகு]

  1. Sansad Bangla Charitbhidhan, p. 622, ISBN 81-85626-65-0
  2. "Statistical Reports of Assembly Elections". General Election Results and Statistics. Election Commission of India. பார்த்த நாள் 2010-11-12.
  3. 3.0 3.1 பெ.சண்முகம். "நிலச்சீர்திருத்தத்தை வடிவமைத்த சிற்பி-தோழர் ஹரி கிருஷ்ண கோனார்". மார்க்சிஸ்ட். பார்த்த நாள் 26 சூலை 2014.
  4. "The story of a pretender". The Statesman, 9 February 2010. பார்த்த நாள் 2010-11-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரி_கிருஷ்ண_கோனார்&oldid=2717565" இருந்து மீள்விக்கப்பட்டது