ஹன்ஸ்ராஜ் கங்காராம்
தோற்றம்
ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீர் | |
|---|---|
| ஒன்றிய இணை அமைச்சர் உள்துறை அமைச்சகம் (இந்தியா) | |
| பதவியில் 9 நவம்பர் 2014 – 23 மே 2019 | |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| முன்னையவர் | ஸ்ரீகாந்த் குமார் ஜெனா |
| நாடாளுமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 2004 - 2019 | |
| முன்னையவர் | நரேஷ்குமார் சுண்ணாலால் புக்லியா |
| பின்னவர் | சுரேஷ் நாராயண் தனோர்கர் |
| தொகுதி | சந்திரப்பூர் |
| நாடாளுமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 1996 - 1998 | |
| முன்னையவர் | ஷாந்தாராம் பொட்டுகே |
| பின்னவர் | நரேஷ்குமார் சுண்ணாலால் புக்லியா |
| தொகுதி | சந்திரப்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | ஹன்ஸ்ராம் கங்காராம் அஹீர் 11 நவம்பர் 1954 நாந்தேடு, பம்பாய் மாநிலம், இந்தியா |
| தேசியம் | |
| துணைவர் | லதா அஹீர் |
| பிள்ளைகள் | ரகுவீர் அஹீர், ஷியாமல் அஹீர், ஸஞ்சீவனி அஹீர் |
| வாழிடம் | சந்திரபூர் |
| சமயம் | இந்து |
16 செப்டம்பர், 2006 மூலம்: | |
ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீர் (Hansraj Gangaram Ahir), மகாராட்டிர அரசியல்வாதி. இவர் 1954-ஆம் ஆண்டின் நவம்பர் பதினொன்றாம் நாளில் மகாராட்டிரத்தில் உள்ள நாந்தேட்டில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் சந்திரப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினொன்று, பதினான்கு, பதினைந்து மற்றும் பதினாறாவது மக்களவைகளில் உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] 2011 முதல் 2014 வரை தொடர்ந்து நான்கு முறை ஸன்ஸத் ரத்னா எனப்படும் நாடாளுமன்ற மணி விருதைப் பெற்றுள்ளார்.[2]
பதவிகள்
[தொகு]இவர் கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[1]
- 1994-96: மகாராட்டிர சட்ட மேலவையில் உறுப்பினர்
- 1996: பதினொன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 2004: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
சான்றுகள்
[தொகு]- 1 2 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
- ↑ "Sansad Ratna Awards 2016 (7th Edition)". June 2016. Archived from the original on 2020-06-27. Retrieved 2020-06-26.