ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரசிம்ம பெருமாள் கோயில்

லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் ஊராட்சி ஒன்றியம் காவேரிபபட்டணத்தில் இருந்து பாலக்கோடு செல்லும் வழியில் கதிரிபுரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கிருட்டிண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட கோயில். இது மலை அடிவாரத்தில் மிகவும் அழகாக அமைந்துள்ளது . இங்கு கிருட்டிண தேவராயர் காலத்து கல்வெட்டுக்கள் பல உள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இக்கோயிலை வழிப்பட பல மாநிலத்தில் இருந்து வந்து வழிப்பட்டு செல்கின்றனர்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. வரலாற்றில் தகடூர் - ஆசிரியர் பெயர் - டாக்டர் கோ.சாந்தலிங்கம்
  2. கிருஷ்ணகிரி வரலாறு - ஆசிரியர் பெயர் திரு.சுகவன முருகன்