ஸ்ரீரம்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ ரம்யா (Sri Ramya) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துவருகிறார். [1] 2008 ஆம் ஆண்டில் 1940 லோ ஒக்க கிராமம் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார்.

இவர் 2008 இல் நந்தி விருதுகளில் நந்தி சிறப்பு ஜூரி விருதை வென்றார். [2] [3] [4]

தொழில்[தொகு]

ஸ்ரீ ரம்யா தெலுங்கு திரைப்படமான 1940 லோ ஓக்க கிராமம் படத்தின் வழியாக 2008 ஆம் ஆண்டில் அறிமுகமானார். 2011 இல் விரோதி படத்தில் நக்சலைட்டாக நடித்தார். [5] 2013 ஆம் ஆண்டில் யமுனா என்ற தமிழ் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் [6] [7]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஸ்ரீ ரம்யா, திரைப்பட நடிகை ஸ்ரீ திவ்யாவின் அக்காள் ஆவார். [6]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்பு
2008 1940 லோ ஒக்க கிராமம் சுசீலா தெலுங்கு அறிமுக படம்
2011 விரோதி மைனா தெலுங்கு
2013 அலைஸ் ஜானகி பிரியா தெலுங்கு
2013 யமுனா யமுனா தமிழ்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது வகை படம் முடிவு Ref.
2008 நந்தி விருதுகள் நந்தி சிறப்பு ஜூரி விருது 1940 லோ ஒக்க கிராமம் வெற்றி [8]

குறிப்புகள்[தொகு]

  1. "Sri Ramya | Virodhi Movie | 1940 Lo Oka Gramam | Neelakanta | Myna". CineGoer.com. 19 June 2011. Archived from the original on 20 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 13 September 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Nandi awards 2008 announced - Telugu cinema news". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 11 May 2015.
  3. "Actor Sathya speaks on 'Yamuna' - Tamil Movie News". Sulekha.com. 2011-08-20. பார்க்கப்பட்ட நாள் 2011-10-21.
  4. "Sri Ramya in a Tamil flick now". 2011-08-20. Archived from the original on 2012-09-13. பார்க்கப்பட்ட நாள் 2011-10-21.
  5. TNN (14 Jan 2017). "Sri Ramya is back as Maina". timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.
  6. 6.0 6.1 "Sri Divya' sister Sri Ramya to make waves in Kollywood". tamilwire.net. Tamil Cinema News. 1 July 2015. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017.
  7. "Sri Ramya". timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 January 2017. பார்க்கப்பட்ட நாள் 4 November 2018.
  8. "Nandi awards 2008 announced - Telugu cinema news". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 11 May 2015.

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீரம்யா&oldid=3723597" இலிருந்து மீள்விக்கப்பட்டது