ஸ்ரீ திவ்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்ரீ திவ்யா
பிறப்பு ஸ்ரீ திவ்யா
மே 25, 1987 (1987-05-25) (அகவை 30)
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு
பணி நடிகை
செயல்பட்ட ஆண்டுகள் 2010–தற்போது

ஸ்ரீதிவ்யா (Sri. Divya) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீ திவ்யா ஐதராபாத்தில் பிறந்தார். தனது கல்வியை கேந்திரிய வித்யாலயத்தில் பயின்றார்.[1]

தொழில்[தொகு]

ஸ்ரீ திவ்யா மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். கிட்டத்தட்ட பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. பிறகு 2012 இல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்தார். இது வெற்றி பெற்றது.[2][3][4][5]

பின் திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.[6] இப்போழுது இவர் "பென்சில்" எனும் படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து கொண்டுள்ளார்.[7] மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை படங்களிலும் நடித்துள்ளார்.[8]

திரைப்பட வரலாறு[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2000 ஹனுமான் ஜங்ஷன் தெலுங்கு குழந்தை நட்சத்திரம்
2000 யுவராஜு தெலுங்கு குழந்தை நட்சத்திரம்
2003 வீடே தெலுங்கு குழந்தை நட்சத்திரம்
2010 மனசார அஞ்சலி தெலுங்கு
2012 பஸ் ஸ்டாப் ஷைலஜா தெலுங்கு
2013 மல்லெல தீரம் லோ சிரிமல்லெ புவ்வு லட்சுமி தெலுங்கு
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் லதா பாண்டி தமிழ்
2014 ஜீவா ஜென்னி தமிழ்
2014 வெள்ளைக்கார துரை யமுனா தமிழ்
2015 காக்கி சட்டை திவ்யா தமிழ்
2015 பென்சில் தமிழ் படப்பிடிப்பில்
2015 ஏத்தி தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Divya in Tamil flick". The Hindu (2011-05-08). பார்த்த நாள் 2013-09-13.
  2. Gupta, Rinku (2013-08-07). "Kollywood's new pretty young thing". The New Indian Express. பார்த்த நாள் 2013-09-13.
  3. "Ravi Babu interview - Telugu Cinema interview - Telugu film director". Idlebrain.com. பார்த்த நாள் 2013-09-13.
  4. Sashidhar AS, TNN Nov 20, 2012, 11.19AM IST (2012-11-20). "Maruthi to direct Sunil - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 2013-09-13.
  5. "‘Bus Stop’ heroine bags a biggie in Tamil". 123telugu.com (1998-01-01). பார்த்த நாள் 2013-09-13.
  6. Posted by: Shekhar. "Sri Divya's Performance In VPVS Bags Rave Reviews - Oneindia Entertainment". Entertainment.oneindia.in. பார்த்த நாள் 2013-09-13.
  7. "Sri Divya is GV Prakash’s heroine!". Sify.com (2013-10-17). பார்த்த நாள் 2013-12-25.
  8. http://www.sify.com/movies/vikram-prabhu-goes-back-to-the-villages-news-tamil-oevl8mgdbiesi.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_திவ்யா&oldid=2227538" இருந்து மீள்விக்கப்பட்டது