ஸ்டைராக்கோசோரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டைராக்கோசோரஸ்
புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம்
ஸ்டைராக்கோசோரஸ் ஆல்பேர்ட்டென்சிஸ் மண்டையோடு. இயற்கை வரலாற்று அமெரிக்க அருங்காட்சியகம்.
புதைபடிவம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: சோரோப்சிடா
பெருவரிசை: டயனோசோரியா
வரிசை: ஓர்னிதிஸ்ச்சியா
துணைவரிசை: செராப்போடா
உள்வரிசை: செராடொப்சியா
குடும்பம்: செராடொப்சிடீ
துணைக்குடும்பம்: செண்ட்ரோசோரினீ
பேரினம்: ஸ்டைராக்கோசோரஸ்
லாம்பே, 1913
இனங்கள்

ஸ்டைராக்கோசோரஸ் என்பது, செராடொப்சிய தொன்மாக் குழுவைச் சேர்ந்த ஒரு பேரினம். தாவர உண்ணியான இது 76.5 - 75 மில்லியன் ஆண்டுவரை பழமையான கிரீத்தேசியக் காலத்தின் கம்பானியக் காலகட்டத்தைச் சேர்ந்தது. இதன் கழுத்தில் அமைந்துள்ள நீட்சி அமைப்பில் நான்கு தொடக்கம் ஆறு வரையான கொம்புகள் உள்ளன. கன்னப்பகுதிகளில் இரண்டு சிறிய கொம்புகளும், மூக்கிலிருந்து ஒரு பெரிய கொம்பும் காணப்படும். இப் பெரிய கொம்பு 60 சதம மீட்டர் வரை நீளமாகவும் 15 சதமமீட்டர் அகலமாகவும் இருக்கும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டைராக்கோசோரஸ்&oldid=1828183" இலிருந்து மீள்விக்கப்பட்டது