உள்ளடக்கத்துக்குச் செல்

சைத் நுர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸைத் நுர்ஸி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சைத் நுர்சி
பிறப்பு1877[1]
நுர்ஸ்,[2][3] பிட்லிஸ் விலாயத்தி, உஸ்மானிய பேரரசு
இறப்பு23 மார்ச் 1960 (அகவை 82–83)[4]
உர்பா, துருக்கி
காலம்19th–20th நுாற்றாண்டு[5]
பிராந்தியம்அன்டோலியா
மதப்பிரிவுசுன்னி
சட்டநெறிஷாபி
சமய நம்பிக்கைஅஷ்அரி[6]
முதன்மை ஆர்வம்இறையியல்,[7] இறை ஞானம், தப்சீர்,[7] நம்பிக்கை மறுமலர்ச்சி[8]
ஆக்கங்கள்ரிசாலே யே நுார்][9]
செல்வாக்கு செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • பத்குல்லா குலான்,[12] முஹம்மத் ஸஈத் ரமதான் பூத்தி[7]

சைத் நுர்சி (1877- 23 மார்ச் 1960) ஸஈத் இ நுர்ஸி எனவும் அழைக்கப்படுகின்றார். உத்தியோகபூர்வப் பெயர் சைத் ஒக்ர்.[13] பொதுவாக சிறப்புப்பெயரான பதியுஸ்ஸமான்[14] என அறியப்படுகிறார்.இவர் ஒரு குர்திய சுன்னி முஸ்லிம் இறையியலாளர். 20ஆம் நுாற்றாண்டில் மிகவும் செல்வாக்குச் செலுத்திய முஸ்லிம்களின் ஒருவராக சைத் நுர்சி தரப்படுத்தப்பட்டிருக்கின்றார். இவர் ரிசாலா யே நூர் என்ற ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புனித அல்-குர்ஆனுக்கான விளக்கவுரைத் தொகுப்பை எழுதினார்.[15][16] சைத் நுர்சி காதிரிய்யா மற்றும் நக்ஷபந்தியா போன்ற சூபி வழியைமப்புக்களின் கருத்துக்களால் மிகவும் கவரப்பட்டார்.அவர் தனது எழுத்துக்களில், காதிரிய்யா வழியமைப்பின் நிறுவனர் செய்க் அப்துல் காதிர் அல்-ஜீலானி மற்றும் நக்ஷபந்தியா தரீக்காவின் பெரும் செய்காக கருதப்படும் செய்க் அஹ்மத் ஷிர்ஹிந்தி போன்றவர்களின் கருத்துகளை பல இடங்களின் குறிப்பிடுகின்றார்.[17] ஆன்மிகம், நவீன விஞ்ஞானம் மற்றும் தருக்கவியலுமே எதிர்காலத்துக்கான வழி என நம்பினார். மதச்சார்பற்ற பாடசாலைகளில் சமய விஞ்ஞானங்களை கற்பிக்குமாறும், மதரீதியான பாடசலைகளில் நவீன விஞ்ஞானத்தைக் கற்பிக்குமாறும் வாதிட்டார்.[15][16][18]

நுர்சியால் ஈர்க்கப்பட்டவர்கள், அவரது சீடர்கள் துருக்கியில் இஸ்லாத்தின் மறுமலர்ச்சியில் பெரும் பங்காற்றினர். தற்போது பல மில்லியன் கணக்கான அவரது சீடர்கள் உலகம் பூராகவும் உள்ளனர்.[19][20] அவரது ரிசாலா யே நூர் புத்தகத்தை வாசிப்பவர்கள் நுார் மாணவர்கள் (தாலிபுன் நுார்)என அறியப்படுகின்றனர். அவரது சீடர்கள் அவரை "உஸ்தாத்" (தலைவர்) என்ற கௌரவப் பெயரால் அழைக்கின்றனர்.

பதியுஸ்ஸமான் ஆரம்பத்தில் கல்விகற்கும் காலத்தில் அசாதாரண நுண்ணறிவு மற்றும் திறன் உடையவராக காணப்பட்டார். மத்ரசாவில்(சமயப் பாடசாலை) பொதுவான கல்வியை பெற்றார். தனது 14ஆவது வயதில் டிப்ளோமாவை பெற்றுக்கொண்டார்.அவர் அபார ஞாபகசத்தி படைத்தவராகவும், ஏனைய சமய அறிஞர்களோடு தோல்வியடையாமல் வாதிடுவதில் பிரசித்தி பெற்றுவந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

பதியுஸ்ஸமான் சைத் நுர்சி உதுமானிய பேரரசின் கிழக்குப்பகுதி அநதோலியாவில் நுர்ஸ் என்ற கிராமத்தில் பிறந்தார்.[21] அவர் தனது ஆரம்பக்கல்வியை சொந்த ஊரிலே பெற்றுக்ககொண்டார். அங்கு அவர் இறையியல் தொடர்பான விவாதத்தில் நிபுணத்துவமுடையவராக விளங்கினார்.இஸ்லாமிய அறிவுத்துறையில் முன்னேற்றமடைந்தவராக காணப்பட்ட பின்னர், பதியுஸ்ஸமான் என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்டார்.பதியுஸ்ஸமான் என்றால் தனித்துவம்மிக்க சிறந்தவர் என்பது பொருளாகும்.விலயத் பகுதியின் கவர்னரால் அவரது இல்லத்தில் தங்குவதற்கு பதியுஸ்ஸமான் அழைக்கப்பட்டார்.கவர்னரின் வாசிகசாலையில், சைத் நுர்சிக்கு விஞ்ஞான அறிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக வாய்ப்புக்கிட்டியது.அங்கு சைத் நுர்சி உதுமானிய துருக்கி மொழியைக் கற்றார்.உதுமானிய பேரரசின் கிழக்குப் பகுதியில் பல்கலைக்கழகக் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு திட்டமிட்டார்.விஞ்ஞானம் மற்றும் இஸ்லாம் சமயத்தையும் இணைத்து, உயர்தரத்திலான தர'க்கவியல் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகத்தை பிராந்தியத்தில் அமைப்பதே அவரது இலக்காக இருந்தது.எனினும், 1909ஆம் ஆண்டு உதுமானிய பேரரசை ஆட்சி கவிழ்கச்செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டார். பின்னர், அக்குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டார்.[22] உதுமானிய பேரரசின் இறுதிக்காலப்பகுதியில் கல்விசீர்திருத்தவாதியாகவும், கிலாபத்தின் மக்களிடையே ஒற்றுமை கொண்டுவருவதற்கான அதிகாரியாகவும் மும்முரமாக பதியுஸ்ஸமான் செயற்பட்டார். பராம்பரிய மத்ரஸாக்களில் பயிற்சி, தஸவ்வுப் (சூபிசம்) மற்றும் நவீன விஞ்ஞானம் போன்ற கல்வி சீர்த்திருத்தங்களை கொண்டுவருவதற்கான ஒர் முன்மொழிவை,சுல்தான் அப்துல் ஹமீத்திடம் பிரேரித்தார்.[7][23]

முதலாம் உலகப்போர் காலப்பகுதயில் உதுமானியப் பேரரசின் முக்கிய அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.[24] ரஷ்யாவின் இராணுவத்தின் கைதியாக ரஷ்யாவுக்கு கொண்டுசெல்லப்பட்ட நுர்சி இரண்டு வருடங்கள் சிறையில் கழித்தார்.1918இல் ரஷ்யாவின் முகாமில் இருந்து தப்பித்த அவர் இஸதான்பூலைசென்றடைந்தார்.[23][25] நுர்ஸி இஸ்தான்பூலில் வரவேற்கப்பட்டார்.மேலும், அவர் தாருல் ஹிக்மத் அல்-இஸ்லாமியின் உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.[26]

ஆக்கம் மற்றும் விநியோகம்

[தொகு]

சைத் நுர்சி அரபுமொழியில் பாங்கு சொல்லி தொழுகைக்கு அழைத்தல் மற்றும் ஏனைய சில விடயங்களுக்குமாக ஸ்பார்த்தா மாகாணத்துக்கு நாடுகடத்தப்பட்டார்.[27] அப்பகுதியில் உள்ள மக்கள் சைத் நுர்சியின் போதனைகளால் கவரப்பட்டனர், அதனால் ஸ்பார்த்தா கவர்னர் சைத் நுர்சியை பர்லா எனும் கிராமத்துக்கு அனுப்பினார்.[28] அங்கு சைத் நுர்சி அவரது ரிஸாலே யே நூர் தொகுப்பின் மூன்றில் இரண்டு பகுதியை எழுதிமுடித்தார்.[29] ரிஸாலே யே நூர் புத்தகத்தை முற்றாக எழுதிமுடித்த பின்னர், அவை துருக்கியின் பல பகுதிகளிலுள்ள நுர்சியின் ஆதரவாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டன.

[30]

பிந்திய வாழ்க்கை

[தொகு]

நுர்சியின் போதனைகள் மக்கள் மத்தியில் பிரசித்திபெற்றுவந்தவேளை, அவை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் மத்தியிலும் பரவியது. கட்டாய மதச்சார்பின்மை சட்டத்தை மீறியமை தொடர்பில் நுர்சி அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டார்.[29]

நுர்சியின் இறுதி தசாப்த காலத்தில், அவர் ஸ்பார்த்த நகரத்தில் குடியேறினார் என கூறப்படுகின்றது.பல் கட்சி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், நுர்சி தனது ஆதரவாளர்களுக்கு அத்னான் மென்டர்ஸின் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு ஆலோசனை வழங்கினார். அக்கட்சி சில மதரீதியான உரிமைகளை மீள வழங்கியது.[29] சைத் நுர்சி கம்யூனிசத்திற்கு எதிரானவராக இருந்தார். தற்காலத்தில் மிகப்பெரிய ஆபத்து கம்யூனிசம் என அதனை எதிர்த்தார்.1956இல் அவரது எழுத்துக்கள் அச்சிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவரது புத்தகங்கள் "ரிஸாலே யே நூர்" (தெய்விக ஒளியின் கடிதங்கள்) என்ற பெயரில் ஒன்றுதிரட்டப்பட்டது.

உர்பாவுக்கு பயணம் செய்த பின்னர் களைப்பின் காரணமாக நுர்சி மரணமடைந்தார்.[31] அவர்கள் நபி இப்ராஹீம் அவர்களின் கல்லறை போன்ற கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[32][33] 1960 இல் துருக்கியின் இராணுவ பதவிகவிழ்ப்பின் பின்னர்,தீவர வலதுசாரி அரசயில்வாதி அல்பார் துர்க் தலமையிலான இராணுவ வீரர்களால் சைத் நுர்சியின் கல்லறை தோண்டப்பட்டு, ஸ்பார்த்தாவில் அறியப்படாத ஓர் இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.[34][35] பல வருடங்களின் பின்னர் சைத் நுர்சி அடக்கப்பட்ட இடம் அவரது ஆதரவாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதுடன,அவரது உடலை பாதுக்கும் நோக்குடன் மீண்டும் ஓர் இரகசிய இடத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sukran Vahide, Islam in Modern Turkey(Kurdistan): An Intellectual Biography of Bediuzzaman Said Nursi, p 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-8297-9
  2. A documentary about his village Nurs (in Turkish)
  3. Ian Markham, Globalization, Ethics and Islam: The Case of Bediuzzaman Said Nursi, Introduction, xvii
  4. Ian Markham, Engaging with Bediuzzaman Said Nursi: A Model of Interfaith Dialogue, p 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7546-6931-9
  5. Islam in Modern Turkey, Sukran Vahide (Suny Press, 2005)
  6. Ozgur, Koca. Said Nursi's Synthesis of Ash'arite Occasionalism and Ibn 'Arabi's Metaphysical Cosmology: "Diagonal Occasionalism," Modern Science", and "Free Will". UMI Dissertations Publishing. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-303-61979-3.
  7. 7.0 7.1 7.2 7.3 Gerhard Böwering, Patricia Crone, Mahan Mirza, The Princeton Encyclopedia of Islamic Political Thought, p482
  8. Robert W. Hefner, Shari?a Politics: Islamic Law and Society in the Modern World, p 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-22310-5
  9. Al-Mathnawi Al-Nuri, Introduction
  10. 10.0 10.1 10.2 David Livingstone, Black Terror White Soldiers: Islam, Fascism and the New Age, p. 568. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4812-2650-9
  11. M. Hakan Yavuz, John L. Esposito, Turkish Islam and the Secular State: The Gülen Movement, p. 6
  12. Juan Eduardo Campo, Encyclopedia of Islam, p 268. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4381-2696-4
  13. "Bediüzzaman ve Risale-i Nur Hizmeti". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-08.
  14. "From Said Nursi's Life: Birth and Early Childhood". Archived from the original on 2017-02-01. பார்க்கப்பட்ட நாள் 2016-01-08.
  15. 15.0 15.1 Gerhard Böwering, Patricia Crone, Mahan Mirza, The Princeton Encyclopedia of Islamic Political Thought, p. 482. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-13484-7
  16. 16.0 16.1 Ian S. Markham; Suendam Birinci; Suendam Birinci Pirim (2011). An Introduction to Said Nursi: Life, Thought and Writings. Ashgate Publishing, Ltd, p 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4094-0770-6.
  17. Ibrahim M. Abu-Rabi, Islam at the Crossroads: On the Life and Thought of Bediuzzaman Said Nursi, p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0791457001, 9780791457009
  18. Said Nursi, Munazarat, p. 86 "The religious sciences are the light of the conscience; the modern sciences are the light of the mind; only on the combining of the two does the truth emerge. The students’ aspiration will take flight with those two wings. When they are parted, it gives rise to bigotry in the one, and skepticism and trickery in the other."
  19. Sukran Vahide, Islam in Modern Turkey: An Intellectual Biography of Bediuzzaman Said Nursi, p. 425. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-8297-9
  20. "An article from First Things". Archived from the original on 2013-01-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-08.
  21. Vahide, Sükran (2005). Islam in modern Turkey: an intellectual biography of Bediuzzaman Said Nursi. SUNY Press. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-6515-8. They [Said Nursî's parents] were among the settled Kurdish population of the geographical region the Ottomans called Kurdistan.
  22. David Livingstone, Black Terror White Soldiers: Islam, Fascism and the New Age, p. 568-569. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4812-2650-9
  23. 23.0 23.1 David Tittensor, The House of Service: The Gulen Movement and Islam's Third Way, p 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-933641-5
  24. Hakan Özoglu, Osmanli Devleti ve Kürt Milliyetçiligi, Kitap Yayinevi Ltd., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-975-6051-02-3, p. 146.
  25. Andrew Rippin and Zeki Saritoprak, The Islamic World, Chapter 33, p. 398
  26. Ian S. Markham; Suendam Birinci; Suendam Birinci Pirim (2011). An Introduction to Said Nursi: Life, Thought and Writings. Ashgate Publishing, Ltd. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4094-0770-6.
  27. David McDowall (14 May 2004). A Modern History of the Kurds: Third Edition. I.B.Tauris. pp. 210–211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85043-416-0.
  28. Sükran Vahide, Bediuzzaman Said Nursi, p. 230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967506286X
  29. 29.0 29.1 29.2 Bosworth, C.E.; van Donzel, E.; Heinrichs, W.P.; Lecomte, G. (1995). Encyclopaedia of Islam (New Edition). Vol. Volume VIII (Ned-Sam). Leiden, Netherlands: Brill. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004098348. {{cite book}}: |volume= has extra text (help)
  30. Bediuzzaman Said Nursi. [date=2012 A Guide For Youth]. I.Sozler. pp. 33–34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-975-432-269-9. {{cite book}}: Check |url= value (help); Missing pipe in: |url= (help)
  31. Ibrahim M. Abu-Rabi, Islam at the Crossroads: On the Life and Thought of Bediuzzaman Said Nursi, p. xxiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-5700-1
  32. Ibrahim M. Abu-Rabi, Islam at the Crossroads: On the Life and Thought of Bediuzzaman Said Nursi, p. xxiii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-5700-1
  33. Ian S. Markham; Suendam Birinci; Suendam Birinci Pirim (2011). An Introduction to Said Nursi: Life, Thought and Writings. Ashgate Publishing, Ltd, p 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4094-0770-6.
  34. Nursi's Letters Found in Yassiada Archives பரணிடப்பட்டது 2011-06-05 at the வந்தவழி இயந்திரம், Zaman
  35. Yes to 27 May No to 28th (in Turkish), Turkish Newspaper Yeni Şafak, 16 August 2003, last accessed 17 June 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைத்_நுர்சி&oldid=3871646" இலிருந்து மீள்விக்கப்பட்டது