அப்துல் காதிர் அல்-ஜிலானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷெய்கு மு‌ஹ்யித்தீன்
அப்துல் காதிர் அல்-ஜிலானி
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்
Abdul_Qadir_Gilani_(calligraphic,_transparent_background)
பிறப்புஅப்துல் காதிர்
மார்ச்சு 19, 1077(1077-03-19)
அமோல், ஈரான்
இறப்பு15 சனவரி 1166(1166-01-15) (அகவை 87)
பக்தாத், ஈராக்
கல்லறைபத்தாது, ஈராக்
தேசியம்ஈராக்கியர்
சமயம்சன்னி இஸ்லாம்
பெற்றோர்அபு சாலி, உம்மு காயிர் பாத்திமா
பிள்ளைகள்அப்துர் ரஸ்ஸாக் ஜீலானி

அப்துல் காதிர் அல்-ஜிலானி (அரபு மொழி: عبد القادر الجيلاني‎, குர்தியம்: Evdilqadirê Geylanî, 1077–1165).இவர் ஈராக்கில் உள்ள ஜீலான் என்ற ஊரில் ஹிஜ்ரி 470 ஆம் ஆண்டு ( கி.பி. 1078 மார்ச் 19 ) பிறந்தார். இவர் காதிரிய்யா என்ற இஸ்லாமிய சூபி சிந்தனைப்பிரிவைத் தோற்றுவித்த இஸ்லாமிய சூபி அறிஞர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

அப்துல் காதிர் ஆரம்பக்கல்வியை தனது 6 வது வயதில் சொந்த ஊரிலேயே பெற்றார். கி.பி.1095இல் தனது பதினெட்டாம் வயதில் உயர்கல்வியைக் கற்பதற்காக ஈராக்கின் பக்தாத் நகருக்கு சென்றார். 30 வருடங்கள் கல்வி கற்பதில் செலவிட்ட அவர் பின்னர் அதே கல்விநிலையத்தில் ஆசிரியப்பணியிலும் மார்க்கதீர்ப்பு வழங்கும் பணியிலும் ஈடுபட்டார்.அன்றையை உலகின் சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்திருந்தார். கிராஅத் தப்ஸீர் ஹதீஸ் பிக்ஹ் மொழி உள்ளிட்ட 13கலைகளில் அவர் வல்லுனராக திகழ்ந்தார். அப்துல் காதிர் ஜீலானி ஹிஜிர் 521 ல் திருமணம் செய்து கொண்டார். நான்கு மனைவியரை திருமணம் செய்த அப்துல் காதிர் ஜீலானிக்கு 27 ஆண்குழந்தைகளும் 22 பெண்குழந்தைகளும் பிறந்தன.

40 ஆண்டுகள் தொடர்ச்சியான மார்க்கப் பிரச்சாரத்திற்கு இடையே ஏராளமான நூற்களை எழுதியுள்ளார். அவருடைய உரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

இறுதியில் ஹ்ஜிரி 561 வருடம் ரபீஉல ஆகிர் பிறை 11 ஆம் நாள் தன்னுடைய 91வது வயதில் இறந்தார்.

இயற்றியவை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ".:: Sirr-ul-Asrar ::. Nafseislam.Com". www.nafseislam.com. 2020-06-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-06-25 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]