ஷெங்கன் பரப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷெங்கன் பரப்பு

ஐரோப்பியாவில் உள்ள 25 நாடுகள் கொண்ட பரப்பை ஷெங்கன் பரப்பு ( Schnegen Area ) என்பர். ஷெங்கன் பரப்பிலுள்ள மக்கள், ஷெங்கன் நாடுகளுக்குள் எந்தவிதமான நுழைவு அனுமதிச் சீட்டு (விசா) போன்ற அனுமதிச்சீட்டுகள் இல்லாமலேயே சென்று வர முடியும்.

2007 வரை ஆஸ்ட்ரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, கிரீசு, ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்த்துக்கல், ஸ்பெயின், சுவீடன் ஆகிய நாடுகளைக் கொண்ட பரப்பு பிறகு 25ஆக மாறியுள்ளது. 2007ல் செக் குடியரசு, எஸ்தோனியா, ஹங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்டா, போலந்து, சுலோவாக்கியா, சுலோவேனியா ஆகிய நாடுகள் இணைந்தன. இங்கிலாந்தும் இந்தக் கூட்டமைப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நாட்டு மக்கள் செங்கன் பரப்பு நாடுகளுக்குள் செல்லும் பொழுது கடவுச்சீட்டு, அல்லது தேசிய அடையாள அட்டை போன்றவற்றை விமான நிலையங்களில் கேட்கும் பொழுது காட்ட வேண்டும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷெங்கன்_பரப்பு&oldid=2229301" இருந்து மீள்விக்கப்பட்டது