ஷீலா பாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷீலா பாலகிருஷ்ணன்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
31 டிசம்பர் 2012 – 31 மார்ச் 2014
முன்னையவர்தேபேந்திரநாத் சாரங்கி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிருவனந்தபுரம், கேரளா, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

ஷீலா பாலகிருஷ்ணன் (Sheela Balakrishnan) இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். 1976-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2] [3]

அரசுப் பணிகள்[தொகு]

1978-ம் ஆண்டு உதவி ஆட்சியராக தனது பணியைத் தொடங்கினார். வேளாண்மை மற்றும் உள்துறைகளின் சார்புச் செயலாளர், சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஆகியவற்றின் துணைச் செயலாளர் பொறுப்பையும் வகித்துள்ளார்.2002-ம் ஆண்டு முதல் முதல்வரின் செயலாளராக பணியாற்றினார்.2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில், சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் செயலராக இருந்த இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த தேபேந்திரநாத் சாரங்கி, பணி ஓய்வு பெறுவதை அடுத்து, தமிழகத்தின் 41-வது தலைமைச் செயலாளராக 31 டிசம்பர் 2012 அன்று பொறுப்பேற்றார். 2014-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆலோசகராக இருந்த இவர் 2017-ம் ஆண்டு அப்பொறுப்பில் இருந்து விலகினார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதிய தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம். தினமணி நாளிதழ். 28 டிசம்பர் 2012. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. தலைமைச்செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம். தினமலர் நாளிதழ். 28 டிசம்பர் 2012. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. புதிய தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன். தினமணி நாளிதழ். 29 டிசம்பர் 2012. {{cite book}}: Check date values in: |year= (help)
  4. Sheela Balakrishnan quits as Tamil Nadu government adviser. The Hindu. 4 feb 2017. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷீலா_பாலகிருஷ்ணன்&oldid=3855501" இலிருந்து மீள்விக்கப்பட்டது