தேபேந்திரநாத் சாரங்கி
Appearance
தேபேந்திரநாத் சாரங்கி | |
---|---|
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் | |
பதவியில் 16 ஏப்ரல் 2011 – 31 டிசம்பர் 2012 | |
முன்னையவர் | எஸ். மாலதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கட்டக், ஒடிசா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இ. ஆ. ப |
இணையத்தளம் | தமிழ்நாடு தலைமை செயலகம் |
தேபேந்திரநாத் சாரங்கி (Debendranath Sarangi) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். 1977-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2]
அரசுப் பணிகள்
[தொகு]1977 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த எஸ். மாலதி பணி ஓய்வு பெறுவதை அடுத்து, தமிழகத்தின் 40-வது தலைமைச் செயலாளராக 16 ஏப்ரல் 2011 அன்று பொறுப்பேற்றார். 2012-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆலோசகராக இருந்த இவர் இரண்டு மாதங்கள் கழித்து அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தேபேந்திரநாத் சாரங்கி புதிய தலைமைச்செயலர். தினமலர் நாளிதழ். 16 மே 2011.
- ↑ Debendranath Sarangi, new Chief Secretary. The Hindu. 16 May 2011.
- ↑ Sarangi appointed as advisor to TN govt. The Hindu Business Line. December 31, 2012.
- ↑ தேபேந்திரநாத் சாரங்கி திடீர் விடுவிப்பு. விகடன் இதழ். 1 மார்ச் 2013.
{{cite book}}
: Check date values in:|year=
(help)