வ. கீதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வ.கீதா

வ.கீதா இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்,மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவல்கள் இரண்டு ஆகும். அவை: சீசன் ஆப் பாம்(Season of the Palm)(தமிழில் -கூளமாதாரி), கரண்ட் சோ(Current Show) (தமிழில் - நிழல்முற்றம்).

எழுத்தாளர் எஸ். வி. ராஜதுரையுடன் இணைந்து பெரியார்: சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடன் இணைந்து இவர் தொகுத்த இரிவால்ட் இதழின் தொகுப்பை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._கீதா&oldid=3174918" இருந்து மீள்விக்கப்பட்டது