உள்ளடக்கத்துக்குச் செல்

வைரங்கள் மற்றும் தேரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஸ்டாவ் டோரின் விளக்கப் படம்

டயமண்ட்ஸ் அண்ட் டோட்ஸ் அல்லது டோட்ஸ் அண்ட் டயமண்ட்ஸ் என்பது சார்லஸ் பெரால்ட்டின் ஒரு பிரெஞ்சு விசித்திரக் கதையாகும். இதை சார்லசு பெரால்ட் எழுதியுள்ளார். மேலும் அவர் "லெஸ் ஃபீஸ்" அல்லது "தி ஃபேரிஸ்" என்றே இக்கதைக்குப் பெயரிட்டார். ஆண்ட்ரூ லாங் அதை தி ப்ளூ ஃபேரி புத்தகத்தில் சேர்த்தார்.[1] இது அத்தை லூயிசாவின் குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பில் லாரா வாலண்டைனால் விளக்கப்பட்டது.[2]

அவரது மூலத்தில், தாய் ஹுல்டாவைப் போலவே, அன்பான பெண் மாற்றாந்தாய் மகளே. செந்த மகள் அல்ல. சிண்ட்ரெல்லாவுடனான ஒற்றுமையை குறைப்பதற்காக இந்த மாற்றம் இருக்கிறது என்பது வெளிப்படையானதாக இருந்தது.

இது ஆர்னே-தாம்சன் கதை வகை 480ஐச் ( கனிவான மற்றும் இரக்கமற்ற பெண்கள்) சேர்ந்தது. ஷிதா-கிரி சுசுமே, ஃப்ராவ் ஹோல் அல்லது திருமதி. ஹோலே, கிணற்றில் உள்ள மூன்று தலைகள், ஃபாதர் ஃப்ரோஸ்ட், தி திரீ லிட்டில் மென் இன் தி வூட், தி மன்ச்டட் ரீத், தி ஓல்ட் விட்ச் மற்றும் தி டூ கேஸ்கெட்ஸ் .[3] இலக்கிய வகைகளில் தி திரீ ஃபேரிஸ் மற்றும் அரோர் மற்றும் ஐமி ஆகியவை அடங்கும்.[4]

சுருக்கம்[தொகு]

மோசமான மனநிலை கொண்ட ஒரு வயதான விதவைக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்; அவரது மூத்த மகள், ஃபேன்னி ஏற்றுக்கொள்ள முடியாதவராகவும் தற்பெருமையாகவும் இருந்தாள் ஆனால் அவரது தாயைப் போலவே தோற்றமளித்தாள் மற்றும் நடந்து கொண்டாள் எனவே தாய்க்கு மிகவும் பிடித்த குழந்தை இவள்தான். அவரது இளைய மகள், ரோஜா இனிமையானவள் மரியாதையானவள் மற்றும் அழகானவள். ஆனால் அவளது மறைந்த தந்தையை ஒத்திருந்தாரள். பொறாமை மற்றும் மனக்கசப்பின் காரணமாக விதவை மற்றும் அவளுக்கு பிடித்த மகளும் இளைய பெண்ணை தவறாக நடத்தினார்கள்.

ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது ஒரு வயதான பெண் ரோஜாவிடம் தண்ணீர் கேட்டாள். ரோஜா பணிவாகச் சம்மதித்து, அதைக் கொடுத்த பிறகு, அந்த பெண் ஒரு தேவதை என்பதைக் கண்டுபிடித்தாள். அவர் மனிதர்களின் குணாதிசயத்தை சோதிக்க ஒரு வயதான பெண் வேடத்தை எடுத்தார். ரோஜா தன் மீது கருணை கொண்டவளாக இருந்ததால், அவள் பேசும்போதெல்லாம் அவள் வாயிலிருந்து ஒரு நகையோ, விலையுயர்ந்த உலோகமோ அல்லது அழகான பூவோ விழும்படி தேவதை ஆசீர்வதித்தாள்.

வீட்டிற்கு வந்து, தன் தாயிடம் ஏன் இவ்வளவு நேரம் எடுத்தாள் என்பதை விளக்கிய பெண்ணின் உதடுகளிலிருந்து விலைமதிப்பற்ற உலோகங்கள், நகைகள் மற்றும் பூக்கள் உதிர்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாள் அந்த தாய். மேலும் தனது விருப்பமான மூத்த மகள் ஃபேன்னிக்கும் பரிசு கிடைக்க வேண்டும் என்று விரும்பினாள். . ஃபேன்னி எதிர்ப்பு தெரிவித்தாள். ஆனால் விதவை அவளை வலுக்கட்டாயமாக கிணற்றுக்கு அனுப்பி, ஒரு வயதான பிச்சைக்காரப் பெண்ணிடம் கனிவாக நடந்துகொள்ளும்படி அறிவுறுத்தினாள். ஃபேன்னி புறப்பட்டாள். ஆனால் தேவதை ஒரு அழகான இளவரசியாகத் தோன்றி, அந்தப் பெண்ணிடம் கிணற்றில் இருந்து தனக்கு ஒரு பானத்தை எடுக்கும்படி கேட்டுக் கொண்டாள். மூத்த மகள் தேவதையிடம் அநாகரிகமாக பேசி அவமானப்படுத்தினாள். தேவதை அவளின் இழிவான மனப்பான்மைக்கு தண்டனையாக, அவள் பேசும் போதெல்லாம் ஃபேன்னியின் வாயிலிருந்து தேரையோ அல்லது பாம்போ விழும் என்று சபித்தாள்.

ஃபேன்னி வீட்டிற்கு வந்ததும், அவள் அம்மாவிடம் தன் கதையைச் சொன்னாள். ஒவ்வொரு வார்த்தையிலும் அவள் வாயிலிருந்து அருவருப்பான தேரைகளும் பாம்புகளும் விழுந்தன. விதவை, கோபத்தில், ரோஜாவை வீட்டை விட்டு வெளியேற்றினாள். காட்டில், அவள் ஒரு அரசனின் மகனைச் சந்தித்தாள். அவன் அவளைக் காதலித்து அவளை மணந்தான். காலப்போக்கில், விதவை அவளுடைய மூத்த மகள் ஃபேன்னி நோய்வாய்ப்பட்டதால் அவளையும் வீட்டை விட்டு வெளியேற்றினாள். ஃபேன்னி இறுதியில் தனியாகவும் பரிதாபமாகவும் காட்டில் இறந்தாள்.

வர்ணனை[தொகு]

நல்லொழுக்கமுள்ள ஒருவரிடமிருந்து நகைகள் விழும் என்ற எண்ணம் இத்தாலிய பியான்கபெல்லா மற்றும் பாம்பு போன்ற பல்வேறு கதைகளிலும் காணப்படுகிறது.[5]

பிரபலமான உபயோகம்[தொகு]

  • அன்கட் ஜெம்ஸ் திரைப்படத்தில் கதையின் மேடைப் பதிப்பு உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.
  • லெட்ஸ் கோ லூனாவின் எபிசோடில் "தி ஃபேரி" என்று அழைக்கப்படும் அனிமேஷன் பதிப்பு தோன்றியது .

படக்கோபுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Andrew Lang, The Blue Fairy Book, "Toads and Diamonds" பரணிடப்பட்டது 2020-02-26 at the வந்தவழி இயந்திரம்
  2. "Aunt Louisa's nursery favourite".
  3. Heidi Anne Heiner, "Tales Similar to Diamonds and Toads" பரணிடப்பட்டது 2012-09-05 at the வந்தவழி இயந்திரம்
  4. Jack Zipes, The Great Fairy Tale Tradition: From Straparola and Basile to the Brothers Grimm, p 543, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-97636-X
  5. Iona and Peter Opie, The Classic Fairy Tales, p 98 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-211559-6

வெளி இணைப்புகள்[தொகு]