வைசாலி சமந்த்
வைசாலி சமந்த் (Vaishali Samant) இவர் ஓர் இந்திய இசை அமைப்பாளரும், பாடலாசிரியரும் மற்றும் பின்னணி பாடகியுமாவார். இவர் மராத்தி திரைப்படம் மற்றும் இசைத் துறையில் பணியாற்றியதற்காக பிரபலமாக அறியப்படுகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்படும் மெய்நிகர் பாடும் போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருக்கிறார். இவர் பெங்காலி, குஜராத்தி, போஜ்புரி, அசாமி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாடியுள்ளார். இவர் மராத்தியில் மட்டும் 2000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இவரது "ஐகா தாஜிபா", " கோம்பாடி பாலாலி ", "நாட் குலா" மற்றும் "துர்ச்சியா ரனாத்" போன்ற பிரபலமான பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. மேலும் இவர் ஏ. ஆர். ரகுமான், விஜு ஷா மற்றும் தபூ மாலிக் போன்ற இசை இயக்குனர்களுக்காகவும் இவர் பாடியுள்ளார். "கொம்படி படாலி" என்ற மிகவும் பிரபலமான மராத்தி பாடல் இவரது அனைத்து இசை நிகழ்சிகளிலும் பாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
இசைப் பயிற்சி
[தொகு]வைசாலி சமந்த் தனக்கு 8 வயதாக இருந்தபோது சாதனை படைத்த நாட்டிய சங்கீத நிபுணர் ஜோத்சனா மொகைல் என்பவரின் கீழ் இசையைக் கற்கத் தொடங்கினார். பின்னர், கட்டி மற்றும் சிறீ ஜெயந்த் தாதர் ஆகியோரிடமிருந்து 5 ஆண்டுகள் இந்திய பாரம்பரிய இசையில் முறையான பயிற்சி பெற்றார். அதன்பிறகு, குரு பண்டிட் மனோகர் சிமோத்திடமிருந்து சர்வதேச இசையுடன் இந்திய பாரம்பரிய இசையை கலக்கும் நுட்பத்தை கற்றுக் கொண்டார்.
தொழில்
[தொகு]சமந்தின் ஐகா தாஜிபா என்ற முதல் பாடல் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. லகான், தால் & சத்யா போன்ற பாலிவுட் திரைப்படங்களில் ஏ. ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களுக்காக இவர் பாடியுள்ளார். விஜு ஷா, தபூ மாலிக் போன்ற பாலிவுட் இசை இயக்குனர்களுக்காகவும் இவர் பாடியுள்ளார். மேலும் பாலிவுட் படங்களான பத்மசிறீ லாலு பிரசாத் யாதவ், கேர்ல்பிரெண்ட், எயிட், மலமால் வீக்லி, துஜே மேரி கசம், சேத்னா, தில் ஜோ பீ கஹே, டிராஃபிக் சிக்னல், கஹூன் கே ... பியார் ஹைசாம்கு, மிர்ச் போன்றத் திரைப்படங்களில் பாடல்களுக்காகவும் இவர் பாடியுள்ளார். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த சத்யா என்றத் திரைப்படத்தில் இடம் பெற்ற சல்கா ரே என்ற இவரது பாடல் மிகவும் பிரபலமானது. இவர் 2004 இல் சிங்கப்பூரின் எம்டிவி ஆசியா இசை விருதுகளை வென்றுள்ளார். [1] [2]
லகான் (2001), கைஸ் கஹூன் கே பியார் ஹை (2003), மஜா நாவ் சிவாஜி (2016 ), கிரண் குல்கர்னி Vs கிரண் குல்கர்னி (2016) திரைப்பட இசைத் தொகுப்பின் ஒரு பகுதியாகவும் இருந்தார். 2017இல் சுபாஷ் கோர்படேவின் கர்ப் என்றப் படம், மற்றும் என். லேகர் என்பவர் இயக்கிய மராத்தி நாடக திரைப்படமான சாந்த் பிரிதிச்சா ஆகியவற்றுடன் இவர் தொடர்புடையவர். திரைப்படங்களுக்கு பாடுவதைத் தவிர, இந்தி இசைத் தொகுப்பிலும் வைசாலி பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் தனது சமீபத்திய பாடலான குங்குனி தூப் என்ற பாடலை யூடியூப்பில் காணொளிக் காட்சியாக வெளியிட்டுள்ளார்.
கௌரவங்கள்
[தொகு]2017 ஆம் ஆண்டில் அம்பர்நாத் மராத்தி திரைப்பட விழாவில் கட்பாத் கோந்தல் சிறந்த பெண் பாடகியாக பரிந்துரைக்கப்பட்டார். [3] [4]
குறிப்புகள்
[தொகு]- ↑ Chikni Chameli[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Vaishali Samant[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 'Loksatta (5 Nov 2017) ' 'http://epaper.loksatta.com/c/23450930' பரணிடப்பட்டது 2017-11-08 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 'Pudhari' 'http://newspaper.pudhari.co.in/home.php?edition=Mumbai&date=-1&pageno=4&pid=PUDHARI_MUM#Article/PUDHARI_MUM_20171105_04_6/452px' பரணிடப்பட்டது 8 நவம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம்