வைக்கிங் கலை
'வைக்கிங் கலை' (Viking Art Style) என்பது, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்காண்டினேவியாவில் உள்ள கலை வடிவம் ஆகும். வைக்கிங் மக்கள் வாழ்ந்த முற்காலத்தில் இந்த கலை உயிர்ப்புடன் இருந்தது. செல்டிக் நாடுகளில் இருந்த கலை வடிவங்களையும், ரோமானியரின் கலைவடிவங்களையும் ஒத்திருக்கும். இது 'நார்சியக் கலை' எனவும் அறியப் படுகிறது.
வரலாறு
[தொகு]'வைக்கிங்' இன மக்களுக்கு 'நார்ஸ்மென்' என்ற பொதுப் பெயரும் வழக்கில் இருந்தது. 'நார்ஸ்மென்' என்ற சொல்லிற்கு 'வடக்குப் பகுதி மக்கள்' என்பது பொருள். அவர்கள் நார்வேயின் வடக்குப் பகுதிகளில் வாழ்ந்ததால், இந்தப் பெயர் ஏற்பட்டது. அடிப்படையில் இவர்கள் கடல் வாணிகம் செய்தவர்கள். எனினும் கடல் வாணிகப் பாதுகாப்பிற்காக இவர்கள் அமைத்து வைத்திருந்த படை காலப் போக்கில் போர்ப் படையாக மாறியது. இவர்கள் கி.பி. 793 முதல் கி.பி. 1066 வரை ஐரோப்பாவின் பல நாடுகளையும் ஆண்டனர். முரட்டுத் தனமான ஆற்றல் கொண்ட படை அவர்களிட்ம் இருந்தது. படையெடுத்துச் சென்று கைப்பற்றும் நாடுகளையும் இடம்பெயர்ந்து சென்று குடியேறிய புதிய நிலப் பகுதிகளையும் அவர்கள் 'வைக்கிங் குடியேற்றங்கள்' என அமைத்து ஆண்டனர். அவர்கள் செழிப்புடன் இருந்த காலத்தில் அவர்களால் வளர்க்கப் பட்டுப் பயன்பாட்டில் இருந்த கலையே 'வைக்கிங் கலை' எனப்பட்டது. இவ் வைக்கிங் கலையில் பல உட்பிரிவு வகைகள் இருந்தன. அவற்றுள் 'ப்ரொவ', 'ஓசெபெர்கு', 'போர்ரே', 'ஜெலிங்கெ', 'மாம்மென்', 'ரிங்கரைக்' மற்றும் 'யுர்னெஸ்' ஆகியன குறிப்பிடத் தக்க வகைகளாகும்.
ஓசெபெர்கு வகை
[தொகு]'ஓசெபெர்கு' வகையில், விலங்குகளைப் படங்களில் வரையும் கலை[1]. பழங்காலத்தில் கடல்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கப்பலின் நினைவாக 'ஓசெபெர்கு' எனப் பெயரிடப்பட்டது. அந்தக் கப்பலில் மரத்தாலான கலைப் பொருட்கள் பல கண்டெடுக்கப்பட்டன[2]-
-
ஓசெபெர்கு கப்பலின் வளைவு
-
ஓசெபெர்கு கலை
-
அருங்காட்சியகத்தில் ஓசெபெர்கு கப்பல்
போர்ரே வகை
[தொகு]'போர்ரே' வகையில் மரத்தில் விலங்குகளைக் குறிக்கும் வடிவங்கள் அமைக்கப் பட்டிருந்தன. 'போர்ரெ' வகையானது, ஒழுங்கு செறிந்த பூ மற்றும் கலைநயம் மிக்க வளைகோடுகள் அமைந்த வேலைப்பாடுகளை உள்ளடக்கியது. இது பத்தாம் நூற்றாண்டு வரையில் புழக்கத்தில் இருந்த்து. வைக்கிங் குல மக்கள் வாழ்ந்த பகுதிகளிலும் குடியேற்றப் பகுதிகளிலும் பரவலாக இருந்தது.[3] ஆபரணங்களையும், நகையையும் அலங்கரிக்கவும், குடியிருப்பு வீடுகள் மற்றும் வீட்டுத் தளவாடங்களின் அலங்கார வேலைகளுக்கும் கப்பல்களின் மர வேலைப்பாடுகளுக்கும் இந்தக் கலை வகை பயன்படுத்தப்பட்டது[3],[4]
படங்கள்
[தொகு]-
ஒசெர்பெர்கு கலையில் செய்த வளைவு
-
அர்னஸ் ஸ்டேவ் தேவாலயம்
சான்றுகள்
[தொகு]- ↑ "The Broa/Oseberg Style (Viking Art Styles)". Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-03-07.
- ↑ Viking Ship from Oseberg (The Viking Rune: All Things Norse)
- ↑ 3.0 3.1 The article osebergstil in Nationalencyklopedin (1994).
- ↑ The Borre Style, c. AD 840 – 970 (Viking Art Styles)[தொடர்பிழந்த இணைப்பு]