உள்ளடக்கத்துக்குச் செல்

வே. பதுமனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலவர்
வே. பதுமனார்
தாய்மொழியில் பெயர்வி. பத்மனாபன்
தேசியம்இந்தியர்
பணிதமிழ் ஆசிரியர்
விருதுகள்தமிழ்ச்செம்மல் விருது, தூய தமிழ்ப் பற்றாளர் விருது

புலவர் வே. பதுமனார் என்கிற வி. பத்மனாபன் என்பவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர் ஆவார்.[1]

தனி வாழ்க்கை[தொகு]

இவர் பெங்களூரில் பிறந்து குடியாத்தத்தில் குடியேறினார்.[2] இவருடைய மாணவப் பருவ நண்பரான ஜி. விஸ்வநாதனுடன் பல்வேறு தமிழ் சார்ந்த நிகழ்வுகளை நடத்தியுள்ளார்.[2] இவர் முதுகலைத் தமிழாசிரியராக குடியாத்தம் திருவள்ளுவர் மேனிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தமிழ்ப்பணி[தொகு]

குடியாத்தம் நகரில் "குடியேற்றம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்' என்கிற இலக்கிய அமைப்பை நிறுவியிருக்கிறார். தமிழியக்கம் என்கிற அமைப்பின் மூலம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதற்காக தூய தமிழ்ப் பெயர்கள் கொண்ட நூலைத் தொகுத்திருக்கிறார்.[3] பதுமனார் வள்ளலார் தெய்வீக நிலையம், தெளிதமிழ் ஆர்வலர் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளையும் நிறுவி தமிழ்ப் பணியாற்றியுள்ளார்.[4] தமிழ் நாடு அரசின் தமிழ்ப் பாடத்திட்ட மேலாய்வாளராக இருந்தார்.

நூல்கள்[தொகு]

இதுவரை 26 நூல்களை எழுதியுள்ளார்.[4]

  1. வந்தவாறு வருமாறு (தன்வரலாறு) - ஜெயக்கொடி பதிப்பகம்[5]
  2. சூட்டி மகிழ்வோம் தமிழ்ப் பெயர்கள் (தொகுப்பாசிரியர்)
  3. ஏறுகுறள் சீரடியால்[6]

குறிப்பிடத்தக்க விருதுகள்[தொகு]

இவர் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க விருதுகள் பின்வருவனவாகும்.

  1. தமிழ்ச்செம்மல் விருது 2015[7]
  2. தூய தமிழ்ப் பற்றாளர் விருது 2020[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இந்த வாரம் கலாரசிகன் (19-12-21)". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/Dec/19/this-week-kalarasigan---19-12-21-3757879.html. பார்த்த நாள்: 25 May 2024. 
  2. 2.0 2.1 வே, பதுமனார். வந்தவாறு வருமாறு. ஜெயக்கொடி பதிப்பகம்.
  3. "`46,000 தனித் தமிழ்ப் பெயர்கள் கொண்ட நூல்!' - சிகாகோ தமிழாராய்ச்சி மாநாட்டில் வெளியீடு". விகடன். https://www.vikatan.com/government-and-politics/book-contains-46000-tamil-names-released-in-chicago. பார்த்த நாள்: 25 May 2024. 
  4. 4.0 4.1 "புலவர் பதுமனாருக்கு தமிழ்ச் செம்மல் விருது". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2017/Apr/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2691494.html. பார்த்த நாள்: 25 May 2024. 
  5. "வந்தவாறு வருமாறு". தினமணி. https://www.dinamani.com/specials/nool-aragam/2023/May/02/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-3999370.html. பார்த்த நாள்: 25 May 2024. 
  6. பதுமனார், வே (2005), ஏறுகுறள் சீரடியால் ..., பார்க்கப்பட்ட நாள் 2024-05-25
  7. "செய்தி வெளியீடு 231" (PDF). தமிழ்நாடு அரசு. செய்தி மக்கள் தொடர்புத் துறை, தமிழக அரசு. பார்க்கப்பட்ட நாள் 26 December 2022.
  8. "அரசாணை எண் 33" (PDF). தமிழ்நாடு அரசு. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம். பார்க்கப்பட்ட நாள் 26 December 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._பதுமனார்&oldid=3968169" இலிருந்து மீள்விக்கப்பட்டது