வேளாண் சுற்றுச்சூழல் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேளாண் சுற்றுச்சூழல் அமைப்புகள் (agroecosystems) என்பன பண்ணைகள், தோட்டங்களில் உணவு விளைச்சல் முறைகளை வளர்க்கும் சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகும். பெயர் குறிப்பிடுவது போல , வேளாண் சூழல் அமைப்பின் மையத்தில் வேளாண்செயல்பாடு உள்ளது. எனவே அவை சுற்றுச்சூழல் அணுகுமுறைகளைப் பயன்படுத்திய வேளாண் சூழலியல், மீளுருவாக்க வேளாண்மையில் ஆய்வுக்கான அடிப்படை அலகு ஆகும்.

பிற சூழலியல் அமைப்புகளைப் போலவே வேளாண் சூழலியல்களும் ஓரளவு மூடிய அமைப்புகளை உருவாக்குகின்றன , இதில் விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள், பிற உயிரினங்கள் ஆகியனவற்றின் சூழல் ஒன்றையொன்று சார்ந்து தொடர்ந்து தொடர்பு கொள்கின்றன. அவை ஓரளவு தன்னியல்பான வேளாண் நடவடிக்கைகளின் இடஞ்சார்ந்த, செயல்பாட்டு ஒத்திசைவான அலகு என வரையறுக்கப்படுகின்றன.[1]

ஒரு வேளாண் சுற்றுச்சூழல் அமைப்பு வேளாண் நடவடிக்கைகளின் உடனடி தளத்திற்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்று காணலாம் (எ. கா. பண்ணை). அதாவது , பொதுவாக இனங்களின் கூட்டங்கள், ஆற்றல் பாய்வுகள், நிகர ஊட்டச்சத்து சமநிலை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால் தாகமுரும் களச்சூழலை இது உள்ளடக்கியது. வேளாண் சுற்றுச்சூழல் அமைப்புகள் , குறிப்பாக முனைப்பாக நிர்வகிக்கப்படும் உயிரினங்கள் , இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளை விட எளிய உயிரின கலப்பு ஆற்றல், ஊட்டச்சத்து பாய்வுகளைக் கொண்டுள்ளன. இதேபோல் வேளாண் சுற்றுச்சூழல் அமைப்புகள் பெரும்பாலும் உயர்ந்த ஊட்டச்சத்து உள்ளீட்டுடன் தொடர்புடையவை , அவற்றில் பெரும்பாலானவை பண்ணையிலிருந்து வெளியேறுகின்றன. இது வேளாண்மையில் நேரடியாக ஈடுபடாத இணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளின் முழுதூட்ட வளத்துக்கு வழிவகுக்கிறது.[2]

மேலும் காண்க[தொகு]

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Agro-ecosystem Health Project. 1996. Agroecosystem health. University of Guelph, Guelph, Canada.
  2. Agroecosystem Management for Improved Human Health: Applying principles of integrated pest management to people. D. G. Peden. Published in New Directions in Animal Production Systems. Proceedings of the Annual Meeting of the Canadian Society of Animal Science, July 5–8, 1998, Vancouver, British Columbia, Canada. Edited by R. Blair, R. Rajamahendran, L.S. Stephens, M.Y. Yang. "Agroecosystem Management for Improved Human Health: Applying principles of integrated pest management to people: International Development Research Centre". Archived from the original on 2008-05-01. பார்க்கப்பட்ட நாள் 2008-12-09.