வேளாண் இயற்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேளாண் இயற்பியல் என்பது வேளாண் அறிவியல், இயற்பியலின் இடைமுகமாகும். இப்புலம் வேளாண் இயற்பியலில் முதனமைச் சிக்கல்க்கலைத் தீர்க்க துல்லியமான அறிவியலின் முன்னேற்றங்களைப் பயன்படுத்துவது வேளாண் பயிர்களின் செயலாக்கத்தில் நிகழும் விளைபொருட்கள், செயல்முறைகளைப் பற்றிய ஆய்வை உள்ளடக்கியது. இது குறிப்பாக சுற்றுச்சூழல் ந்லம், வேளாண்பொருட்களின் தரம், உணவுப் பெருக்கம் ஆகியவற்றுக்கு முதன்மை அளிக்கிறது.

வேளாண் இயற்பியல் உயிரியற்பியலுடன் நெருக்கமாக தொடர்புடையது , ஆனால் தாவரங்களின் இயற்பியல் , விலங்குகள் , மண் ஆகியவற்றுடனும் வேளாண் நடவடிக்கைகள், பல்லுயிர்ப் பெருக்கம் ஆகியவற்றில் ஈடுபடும் வளிமண்டலத்துடனும் வரம்புப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து அறிவியல், வேளாண் சூழலியல் , வேளாண் தொழில்நுட்பம் , உயிரித் தொழில்நுட்பம் , மரபியல் போன்றவற்றின் அறிவை உள்ளடக்கிய உயிரி வாழிடம், பயோகோனோசிஸின் குறிப்பிட்ட கூறுகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டயயத்தில் இது உயிர் இயற்பியலிலிருந்து வேறுபடுகிறது.

சிக்கலான கள வளாக மண், தாவர, வளிமண்டல அமைப்புகளின் கடந்தகால பட்டறிவு தொடர்பான வேளாண்மையின் தேவைகள் ஒரு புதிய கிளையின் தோற்றத்தின் வேரில் உள்ளன. வேளாண் இயற்பியல் இதைச் செய்முறை இயற்பியலுடன் கையாள்கிறது. இக்கிளைக்கான நோக்கம் மண் அறிவியலில் தொடங்கி (இயற்பியல் முதல் மண் சூழலுக்குள் உள்ள உறவுகளைப் பற்றிய ஆய்வுக்கு மட்டுப்படுத்தப்பட்டது) காலப்போக்கில் வேளான் பயிர்கள், விளைபொருட்களின் பண்புகளை முதலில் உணவாகவும் , அறுவடைக்குப் பிந்தைய மூலப்பொருட்களாகவும் , தரப்பாதுகாப்பு, உணவு அறிவியலில் பயன்பாட்டிற்கான ஊட்டச்சத்துத் துறையிலிருந்து வேறுபட்டதாகக் கருதப்படும் அடையாளமிடல் கவலைகள் ஆகியவற்றில் விரிவடைந்தது.

வேளாண் இயற்பியல் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி மையங்களில் உலுப்லினில் உள்ள வேளாண் இயற்பியியல் போலந்து அறிவியல் கல்விக்கழகம், புனித பீட்டர்சுஸ்பர்கில் உள்ள வேளாண் இயல் ஆராய்ச்சி நிறுவனம், உருசிய அறிவியல் கல்விக்க்கழகம் ஆகியவை அடங்கும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாண்_இயற்பியல்&oldid=3799907" இலிருந்து மீள்விக்கப்பட்டது