வேளாண் ஆய்வு நிலையம், அனக்காயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேளாண் ஆராய்ச்சி நிலையம், அனக்காயம் (Agricultural Research Station) என்பது கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தில் அனக்காயத்தில் உள்ள கேரள வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மத்திய மண்டலத்தின் கீழ் உள்ள ஒரு ஆய்வு நிலையம் ஆகும். இந்நிலையம் முதன் முதலில் முத்திரி ஆராய்ச்சி நிலையமாக 1963 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 9.92 ஹெக்கடா் பரப்பளவு கொண்டது. அனக்காயம் வேளாண் ஆராய்ச்சி நிலையம் 18 தாய் தாவங்களின் சேர்க்கையால் உருவாக்கப்பட்ட 216 வீரிய ஒட்டு இரகங்களை பராமரித்து வருகிறது. அனக்காயம் 1, தாராஸ்ரீ, மிருதளா போன்ற மூன்று பயிர் இனங்கள் இந்நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. 

கேரள அரசு இந்நிலையத்தில் ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை நடத்த அதிகமான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுகிறது. மேலும் கேரள அரசாங்கத்தால் வழங்ப்பெறும் சிறந்த ஆராய்ச்சி நிலையம் என்ற தகுதியைப் பெற்றுள்ளது. [1]

துபாய் வேளாண் அமைச்சா் தூதுக் குழுவினர் 2012 ஆம் ஆண்டு இந்நிலையத்திற்கு வருகையளித்துள்ளாா்.[2] [3]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Official Website [1]
  • KAU Institutions / Stations [2]