வேத் ராகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேத் ராகி ( Ved Rahi; பிறப்பு 22 மே 1933) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் பெரும்பாலும் தோக்ரி மொழியில் எழுதுகிறார். 1996 ஆம் ஆண்டு யுடிவி நிறுவனத்தின் கீழ் தூர்தர்ஷனுக்காக மீராபாய் என்ற புராணத் தொடரை இயக்கினார். பல்வேறு பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் திரைக்கதை மற்றும் வசனங்களையும் இவர் எழுதியுள்ளார். விநாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்க்கைக் காவியமான வீர் சாவர்க்கர் (2001) என்ற இந்தித் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

வேத் ராகி, சம்முவில் 22 மே 1933 இல் பிறந்தார். இவரது தந்தை, முல்க் ராஜ் சரஃப், 1924 இல் ரன்பீர் என்ற தலைப்பில் சம்மு காசுமீர் மாநிலத்தில் முதல் செய்தித்தாளைத் தொடங்கினார். 1976 ஆம் ஆண்டு இந்திய அரசால் சராஃபுக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

பணிகள்[தொகு]

வேத் ராகி தோக்ரி மொழியில் பல்வேறு சிறுகதைகளை வெளியிட்டார். மேலும் நரேந்திர கசூரியா மற்றும் மதன் மோகன் சர்மா ஆகியோருடன் இணைந்து நவீன காலத்தின் குறிப்பிடத்தக்க தோக்ரி எழுத்தாளராகக் கருதப்படுகிறார். [1] [2]

இவரது புத்தகங்கள் பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சரிதா சர்மா என்பவரால் எழுதப்பட்ட லால் டெட் (2015) என்ற நூலை சிந்தி மொழியிலும் , அப்துல் கனி பேக் அத்தார் என்பவர் எழுதிய யின் வாப்பா (2010) என்ற நூலை காஷ்மீரி மொழியிலும் ஆலே என்ற பெயரரிலும் மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்புக்காக சிந்தி மற்றும் காஷ்மீரி பிரிவுகளில் சாகித்திய அகாதமி விருதினையும்பெற்றார். [3]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Modern Indian Literature, an Anthology: Surveys and poems. Sahitya Akademi. 1992. பக். 103–104. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788172013240. https://books.google.com/books?id=m1R2Pa3f7r0C&dq=Ved+Rahi&pg=PA103. 
  2. Two Decades of Dogri Literature. Sahitya Akademi. 1997. பக். 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126003938. https://books.google.com/books?id=rXruaMZ6FKAC&dq=dogri+shivanath&pg=PA64. 
  3. "Sahitya Akademi Translation Prize 2015" (PDF). Sahitya-akademi.gov.in. 15 February 2016. பார்க்கப்பட்ட நாள் 31 July 2023.
  4. "Ved Rahi's hat-trick of awards in a month". Daily Excelsior. 28 August 2014. பார்க்கப்பட்ட நாள் 2 August 2023.
  5. "Film director, novelist Ved Rahi to get Kusumagraj literature award". The Tribune. 13 March 2019. பார்க்கப்பட்ட நாள் 31 July 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேத்_ராகி&oldid=3892134" இலிருந்து மீள்விக்கப்பட்டது