வேதித் தொழிற்நுட்ப வல்லுநர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோலோங் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் ஆய்வகம்

வேதித் தொழிற்நுட்ப வல்லுநர் என்போர் வேதியியல், வேதிப் பொறியியல் மற்றும் தொடர்புடைய துறைகளில் திறன் பெற்றோரைக் குறிப்பதாகும். இவர்கள் பல்வேறுபட்ட ஆய்வகங்கள் முதல் தொழிலகங்கள் வரை பரந்துபட்ட சூழல்களில் பணியாற்றுபவர் ஆவர். இவர்களின் பணித் திறம் பல முகங்களைக் கொண்டதாக இருப்பதனால் இவர்களின் சிறப்புப் பணிகளைப் பொதுமைப்படுத்துவது இயலாததாகும்.

எரிநெய்வேதித் தொழிலகங்கள், மருந்துத் தொழிலகங்கள் மற்றும் பல வேதித் தொழிற்சாலைகள் இவர்களைப் பணியமர்த்துகின்றன. இவ்வகைத் தொழிலகங்களின் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஆலோசனை மற்றும் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளில் இவர்கள் பணிபுரியக்கூடும்.