வேதா கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேதா கிருஷ்ணமூர்த்தி

வேத கிருஷ்ணமூர்த்தி (Veda Krishnamurthy பிறப்பு 16 அக்டோபர் 1992) ஒரு இந்திய பெண்கள் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.[1][2] ஜூன் 30, 2011 அன்று டெர்பியில் நடைபெற்ற இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது18 ஆவது வயதில் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[3] கிருஷ்ணமூர்த்தி தனது முதல் ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் எடுத்தார்.[4] அவர் ஒரு வலது கை மட்டையாளர் மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.[5][6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

வேதா கிருஷ்ணமூர்த்தி அக்டோபர் 16, 1992 இல் கடூர், சிக்கமங்களூரு மாவட்டம், கருநாடகத்தில் பிறந்தார். வேதாவின் குடும்பத்தில் நான்கு உடன்பிறப்புகளில் இவர் இளையவர் ஆவார். வேதா தனது 3 வயதில் தெருக்களில் துடுப்பாட்டம் விளையாடத் தொடங்கினார்.[4] இவரின் இளம் வயதில் கராத்தே வகுப்புகளுக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் இவருக்கு அது பிடித்தமானதாக இல்லை. இருப்பினும், சிறு வயதிலிருந்தே தனது பலத்தை வளர்த்துக் கொண்டதற்கு தான் கற்றுக்கொண்ட தற்காப்பு கலை காரனமாக இருந்ததாக கூறுகிறார். வேதா தனது 12 வயதில் கராத்தேவில் ஒரு கருப்பு பெல்ட்டைப் பெற்றார்.[7] அவர் தனது 13 வயதில் கர்நாடக கிரிக்கெட் நிறுவனத்தில் தனது கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கினார்.[8] அவரது திறமையை உணர்ந்த நிறுவனத்தின் இயக்குனர் இர்பான் சைட், வேதாவின் தந்தையிடம் தனது குடும்பத்தினை பெங்களூர் நகரத்திற்கு மாற்றுமாறு அறிவுறுத்தினார்.[7] அவரது அறிவுரையினை ஏற்று அவரின் தந்தை கர்நாடகாவின் சிக்கமகளூருவில் உள்ள ஒரு சிறிய நகரத்திலிருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தார் [8][9]

இவர் துடுப்பாட்ட விளையாட்டின் அடிப்படைகளை அவளுக்குக் கற்பித்த தனது முதல் பயிற்சியாளரான வேர்பா இர்பான் சைட் என்பவரைப் பாராட்டுகிறார். அபுர்வா சர்மா, சுமன் சர்மா போன்ற பயிற்சியாளர்களும் அவரை துடுப்பாட்ட வீரராக வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்ததாகக் கூறினார். அவர் குழந்தையாக இருந்தபோது மிதாலி ராஜ் தனக்கு ஒரு முன்மாதிரியாக இருந்ததாகக் கருதினார்.[4] இவர் பின்னர் மிதாலியுடன் இணைந்து உள்நாட்டு மற்றும் தேசிய அணிகளில் விளையாடினார்.[8]

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

நவம்பர் 2015 இல், முதல் முறையாக பிசிசிஐ பெண்கள் வீரர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியது.[10] அதில் இவர் பி-தர ஒப்பந்த பட்டியலில் இடம் பெற்றார்.

உள்ளூர் போட்டிகள்[தொகு]

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், கே.எஸ்.சி.ஏ ஜனாதிபதியின் லெவன் மற்றும் கே.எஸ்.சி.ஏ செயலாளரின் லெவன் ஆகியவற்றுக்கு இடையேயான முதல் இருபதுக்கு 20 கண்காட்சி போட்டியை நடத்தியது. இதில் இவர் ஜனாதிபதி லெவன் அணியை வழிநடத்த வேதா தேர்வு செய்யப்பட்டார்.[8][11] 2017–18 மகளிர் பிக் பாஷ் லீக் சீசனுக்காக அக்டோபர் 2017 இல், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி சார்பாக விளையாடுவதற்கு இவர் டெஹெவானார்.[8]

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

ஜூன் 2011 இல் டெர்பியில் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் தனது 18 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார், மேலும் அந்த போட்டியில் 51 ரன்கள் எடுத்தார். இதற்கிடையிலிந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. பில்லெரிக்கேயில் நடந்த நாட்வெஸ்ட் டி 20 குவாட்ராங்குலர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார்.[12]

சான்றுகள்[தொகு]

 1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 3. Krishnamurthy, Bisht in quadrangular sqaud
 4. 4.0 4.1 4.2 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 5. India v England
 6. Veda Krishnamurthy looks forward to England experience
 7. 7.0 7.1 Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 8. 8.0 8.1 8.2 8.3 8.4 . 
 9. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 10. PTI (10 November 2015). "Rahane gets Grade A contract, Raina demoted to Grade B". The Times of India. https://timesofindia.indiatimes.com/top-stories/Rahane-gets-Grade-A-contract-Raina-demoted-to-Grade-B/articleshow/49724826.cms?. பார்த்த நாள்: 19 July 2018. 
 11. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 12. "Indian's Star Player- A chat with Veda Krishnamurthy.". https://www.pressreader.com/india/womans-era/20171016/281530816298238.