உள்ளடக்கத்துக்குச் செல்

வேகத் தடுப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரினால் உருவாக்கப்பட்ட வேகத்தடை.
இறப்பரால் உருவாக்கப்பட்ட வேகத்தடை

வேகத் தடுப்பான் என்பது, சாலைகளில் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் வண்டிகளின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்காக ஒரு சாதனம். ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தைக் குறைக்க வேண்டிய தேவையை இது உருவாக்குகின்றது. வேகத் தடுப்பான்கள் பெரும்பாலும் திட்டுக்கள், மேடைகள் போன்ற வடிவில் அமைகின்றன.

அடிக்கடி மக்கள் சாலையைக் கடக்கக்கூடிய இடங்கள்; பள்ளிகள், மருத்துவமனைகளை அண்டிய சாலைகள், வண்டிகள் கூடிய கவனத்துடன் செல்ல வேண்டிய இடங்கள் போன்றவற்றில் வேகத் தடுப்பான்கள் பயன்படுகின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ள இவ்வேகத் தடைகள் சிறப்பாகச் செயற்படக்கூடியவை எனினும், இவற்றின் பயன்பாட்டில் சில பாதகமான அம்சங்களும் உள்ளன. குறிப்பாக வண்டிகள் இவற்றின் மீது ஏறி இறங்கும் போது சத்தம் ஏற்படுகிறது. இரும்பினால் செய்யப்படும் சில வகைகளில் இது கூடுதலாக இருக்கும். தவிர, இத்தடைகள் வண்டிகளைச் சேதத்துக்கு உள்ளாக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. தடைகள் வண்டியோட்டிகளுக்குத் தெளிவாகத் தெரியாத நிலையில், வேகமாக வந்து இவற்றில் ஏறும்போது இவ்வாறான நிலை ஏற்படுவதுண்டு.

பயன்படும் பொருட்கள்

[தொகு]

வேகத் தடைகள் செய்வதற்குப் பல்வேறு பொருட்கள் பயன்படுகின்றன. தார், காங்கிறீட்டு, நெகிழி, உலோகம், இரப்பர் என்பன இவற்றுள் அடங்கும். சில சாலையுடன் சேர்த்து உருவாக்கப்படுகின்றன. தாரினால் செய்யப்படும் தடைகள் இவ்வாறே உருவாகின்றன. வேறு சில, வேறிடத்தில் செய்யப்பட்டு சாலையில் பொருத்தப்படுகின்றன.

வரலாறு

[தொகு]

1906 ஆம் ஆண்டு யூன் 7 ஆம் தேதி, "த நியூ யார்க் டைம்ஸ்", வேகத்தடை எனக் கொள்ளத்தக்க ஒன்றை அமைக்கவுள்ளது குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டது. இதன்படி அமெரிக்காவின் நியூ செர்சியில் உள்ள சத்தாம் என்னும் இடத்தில் சாலையை மக்கள் கடக்கும் வழியை 5 அங்குலம் உயர்த்தி அமைக்க முடிவு செய்யப்பட்டது. பல நகரங்களில் இது போன்ற தடைகள் அமைப்பதற்கான ஆலோசனைகள் இடம்பெற்றிருப்பினும், சத்தாமிலேயே இது முதன் முதலாக அமைக்கப்பட்டது.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. "Democratic Rate Plan Favored by Roosevelt [and other news]". New York Times. 1906-03-07. p. 3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேகத்_தடுப்பான்&oldid=3766013" இலிருந்து மீள்விக்கப்பட்டது