உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளை மூக்குக்கொம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை மூக்குக்கொம்பன்
White rhinoceros in Kruger Park
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Perissodactyla
குடும்பம்:
பேரினம்:
Ceratotherium
இனம்:
C. simum
இருசொற் பெயரீடு
Ceratotherium simum
(Burchell, 1817)
துணையினம்

Ceratotherium simum simum
Ceratotherium simum cottoni

The White Rhinoceros original range (orange: Northern (C. s. cottoni), green: Southern (C. s. simum)).
இப்படத்தில் உள்ளது வெள்ளை மூக்குக்கொம்பன். உண்மையில் இது சாம்பல் நிறமுடையது. ஆப்பிரிக்கான மொழியில் பரந்த அல்லது விரிந்த என்னும் பொருள் படும் wyd ன்னும் சொல்லைத் தவறுதலாக white (வெள்ளை) என்று உணர்ந்ததால் ஏற்பட்ட குழப்த்தால் வெள்ளை மூக்குக்கொம்பன் என்று அழைக்க நேர்ந்தது. கறுப்பு மூக்குக்கொம்பனின் வாயின் உதடுகள் சற்று குவிந்து இருக்கும். "வெள்ளை" மூக்குக்கொம்பனின் வாயின் உதடுகள் அகலமாக இருக்கும்.இரண்டாவது மூக்குக்கொம்பு குட்டையாக இருப்பதையும் படத்தில் காணலாம்

வெள்ளை மூக்குக்கொம்பன் என்பது மூக்குக் கொம்பன் இனங்களிலேயே மிகப்பெரிய அளவுடைய இனம் ஆகும். இதில் மொத்தம் இரண்டு துணையினங்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் பெருமளவு உள்ள தென் வெள்ளை காண்டாமிருகம் (Ceratotherium simum simum) வகையில் இன்று ஏறத்தாழ 14,500 விலங்குகள் உள்ளன. வட வெள்ளை காண்டாமிருகம் (Ceratotherium simum cottoni) மிக இக்கட்டான அளவு அருகிவிட்டது. அந்த இனத்தில் தற்போது (2018) மொத்தம் இரண்டு பெண்கள் மட்டும் தான் உலகில் உயிருடன் இருக்கின்றன.[2] அவற்றில் ஒன்று 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நோய் தொற்றின் காரணமாக இறந்துவிட்டது.[3]

வெள்ளை காண்டாமிருகம் பெரிய உடலும் சிறிய கழுத்தும், பெரிய முகமும் பரந்த நெஞ்சுப்பகுதியும் கொண்ட பெரும் விலங்கு. இதன் எடை 3000 கிகி (6000 பவுண்டு) மீறக்கூடியது. 4,500 கிகி (10,000 பவுண்டு) எடையுடைய விலங்கும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.[4]. முன்னுள்ள கொம்பின் நீளம் ஏறத்தாழ 90 செமீ இருக்கும், ஆனால் 150 செமீ கூட இருக்கக்கூடும். இரண்டாவது கொம்பு பெரும்பாலும் சிறியதாக இருக்கும். இம் மூக்குக்கொம்பனின் உடல் சாம்பல் நிறம் முதல் வெளிறிய பழுப்பு/மஞ்சள் நிறம் வரை வேறுபாடு கொண்டது. உடலில் மயிர் ஏதும் இருப்பதில்லை. வாலிலும், காது மடலின் ஓரத்திலும் முடியிருக்கும். இதன் வாய் அகலமாக இருக்கும். முதுகில் சற்றே திமில் போன்ற உயர்ச்சி இருக்கும்.

KrugerPark

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ceratotherium simum". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  2. Times Online | News | Environment | Poachers kill last four wild northern white rhinos
  3. இருந்ததே நான்கு,அதிலும் ஒன்று போய்விட்டது பிபிசி தமிழ் 24 நவம்பர் 2015
  4. "African Rhinoceros". Safari Now. Archived from the original on 2008-05-22. பார்க்கப்பட்ட நாள் 2008-03-19.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_மூக்குக்கொம்பன்&oldid=3572447" இலிருந்து மீள்விக்கப்பட்டது