வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்கம்

ஆள்கூறுகள்: 41°16′23″S 174°47′9″E / 41.27306°S 174.78583°E / -41.27306; 174.78583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்கம்
வெஸ்ட்பாக் விளையாட்டரங்கம்
'தி இசுடேடியம்' 'தி கேக் டின்'
வாடெசுடவுணிலிருந்து காணும்போது வெஸ்ட்பேக் அரங்கம்
இடம் வெலிங்டன், நியூசிலாந்து, நியூசிலாந்து
அமைவு 41°16′23″S 174°47′9″E / 41.27306°S 174.78583°E / -41.27306; 174.78583
எழும்பச்செயல் ஆரம்பம் 12 மார்ச்சு 1998
திறவு 3 சனவரி 2000
உரிமையாளர் வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்க அறக்கட்டளை
ஆளுனர் வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்க அறக்கட்டளை
தரை புற்றரை
கட்டிட விலை NZ$130 மில்லியன்
கட்டிடக்கலைஞர் வாரென் & மகோனி
பாப்புலசு நிறுவனம்
Project Manager பெகா கார்ட்டர் ஓலிங்சு & பெர்னர் லிட்.,
Main contractors பிளெட்சர் கட்டுமான நிறுவனம்
முன்னாள் பெயர்(கள்) வெஸ்ட்பாக் அறக்கட்டளை விளையாட்டரங்கம்
குத்தகை அணி(கள்) வெல்லிங்டன் அரிகேன்சு (சூப்பர் இரக்பி) (2000–நடப்பு)
வெல்லிங்டன் லயன்சு (ஐடிஎம் கோப்பை) (2000–நடப்பு)
வெல்லிங்டன் பயர்பர்ட்சு (நியூசிலாந்து துடுப்பாட்ட வாரியம்) (2000–நடப்பு)
வெல்லிங்டன் பீனிக்சு (ஏ-கூட்டிணைவு) (2008–நடப்பு)
ஒடாகோ பல்கலைக்கழகம் [1]
செயின்ட் கில்டா காற்பந்துக் கழகம் (ஆத்திரேலிய காற்பந்து கூட்டிணைவு) (2013-நடப்பு)
அமரக்கூடிய பேர் 34,500 (இருக்கைகள்)[2]

36,000 (மொத்தக் கொள்ளளவு)[சான்று தேவை]

37,000 (தற்காலிக இருக்கைகளுடன்)[சான்று தேவை]

பரப்பளவு நீளம் (வடக்கு–தெற்கு) 235 மீட்டர்கள்
அகலம் (மேற்கு–கிழக்கு) 185 மீட்டர்கள் (விளையாட்டரங்க அளவைகள், விளையாட்டுக் களத்தினதல்ல)

வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்கம் (Wellington Regional Stadium), வணிகமுறையில் வெஸ்ட்பேக் விளையாட்டரங்கம் (Westpac Stadium) நியூசிலாந்தின் வெல்லிங்டனில் அமைந்துள்ள முதன்மையான விளையாட்டரங்காகும். இதன் வடிவத்தையும் சில்வர் வண்ண வெளிப்புறச் சுவர்களையும் கொண்டு வெல்லிங்டனில் வசிக்காத சில வெளியூர்க்காரர்கள் இதனை "தி கேக் டின்" எனக் குறிப்பிடுகின்றனர்.[3] விளையாட்டரங்கின் கிண்ண அளவை 48,000 சதுர மீட்டர்களாகும்.

இந்த அரங்கத்தை 1999இல் பிளெட்சர் கட்டுமான நிறுவனம் கட்டியது.[4] இது வெல்லிங்டன் தொடர்வண்டி நிலையம் போன்ற முதன்மை போக்குவரத்து வசதிகளுக்கு அருகில் உள்ளது. மீட்கப்பட்ட தொடர்வண்டி நிலத்தில் இது கட்டப்பட்டுள்ளது.

பன்னாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பிருந்த அத்லெடிக் பூங்கா அரங்கம் தகுதியற்று இருந்ததால் அதற்கு மாற்றாக இது கட்டப்பட்டது. மேலும் கூடிய கொள்ளளவு கொண்ட ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டிகளுக்கான அரங்கமாக இது கட்டப்பட்டது. தவிரவும் பெரும் திரளானோர் இரசிக்கக்கூடிய கச்சேரிகள் நடத்த இந்த அரங்கம் பயனாகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. University of Otago Stadium Centre Wellington
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
  3. Maclean, Chris (3 May 2013). "Westpac Stadium -- Wellington region: Economic fall and rise: 1976–2006". Te Ara - the Encyclopedia of New Zealand. பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.
  4. Fletcher Construction website