வெலின் பின்னடைப்பு
Jump to navigation
Jump to search

யு.எஸ்.எஸ்.அலபாமா (பிபி 60)-ல் இருக்கும் 16-அங்குல மார்க் 6 கப்பற் பீரங்கியின் வெலின் பின்னடைப்பு, 1943. நான்கு தனித்தனியே மரையிடப்பட்ட "படிகளை" அடைப்பின்மீது உள்ளதை கவனிக்கவும். அடைப்பு மேல்தூக்கப்பட்டு கடிகாரப்போக்கில் சுற்றப்படுகையில், அவை குழலாசனத்தின் உட்புற படிகளில் பொறுந்திக் கொள்ளும்.
வெலின் பின்னடைப்பு என்பது, பீரங்கிகளில் குழலாசனத்தை பூட்டியடைப்பதற்கு, 1889 அல்லது 1890-ல், சுவீடனைச் சேர்ந்த ஆக்சல் வெலின் கண்டுபிடித்த, ஒரு புரட்சிகரமான திருகடைப்பு வடிவம் ஆகும்.
வடிவமைப்பு [தொகு]
பின்னடைப்பு ஆனது, படிப்படியாக அதிகரிக்கும் ஆரையம்முள்ள, பல "படிகளை" உடைய, திருகாணி வடிவத்தில் இருக்கும். ஒவ்வொரு படியும், ஒரேயளவிலான வட்டக் கோணப்பகுதியாக இருக்கும்.[1]
இதை மூடிச் சுற்றும்போது ஒவ்வொரு படியும், அதற்கு இணையாக துப்பாக்கிக் குழலாசனத்தில் வெட்டப்படிருக்கும் மரையுடன் பொறுந்திக் கொள்ளும். பின்னடைப்பிலுள்ள மரைகளால் ஆக்கிரமிக்கப்படும், குழலாசன பரப்பை தரும் சூத்திரம் பின்வருமாறு:
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Brassey's Naval Annual 1899, page 389 http://www.gwpda.org/naval/brassey/b1899o06.htm
புற இணைப்புகள் [தொகு]
- வெலின் குழலாசன இயங்குமுறையை காட்டும் யூடியூப் காணொளி (ஆங்கிலத்தில்)
- இராச்சிய நியுசிலாந்து பீரங்கிப்படை கழகம், குழலாசன இயங்குமுறைகள் (ஆங்கிலத்தில்)