வெர்னா எலிசபெத் வாட்ரே இங்க்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெர்னா எலிசபெத் வாட்ரே இங்க்டி
Verna Elizabeth Watre Ingty
பிறப்பு1931-1932
சில்லாங், மேகாலயா, இந்தியா
இறப்பு14 சனவரி 2004 (வயது 72)
Shillong
பணிசமூக சேவகர்
வாழ்க்கைத்
துணை
பிரதாப் இங்க்டி
பிள்ளைகள்பி.டபிள்யூ. இங்க்டி
விருதுகள்பத்மசிறீ

வெர்னா எலிசபெத் வாட்ரே இங்டி (Verna Elizabeth Watre Ingty) இந்திய சமூக சேவகரும் மேகாலயா மாநில நல ஆலோசனை வாரியத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். [1] துரா அன்னையர் சங்கத்தின் தலைவராகவும் இவர் இருந்தார். 2003 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நான்காவது உயரிய இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். [2] இந்த விருதைப் பெறும் முதல் காரோ பழங்குடியின நபர் என்ற பெருமை இவருக்குரியதாகும். [3] இங்டி மேகாலயாவின் சில்லாங்கில் 14 ஜனவரி 2004 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று தனது 72 ஆவது வயதில் இறந்தார் [1] இவரது மகன் பி. டபிள்யூ இங்க்டி ஓர் எழுத்தாளராகவும் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகவும் அறியப்படுகிறார்.[4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Deccan Herald". 15 January 2004. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
  2. "Padma Awards" (PDF). Padma Awards. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 6 February 2015.
  3. "Telegraph India". Telegraph India. 28 January 2003. Archived from the original on 27 April 2003. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
  4. Bhaskara: The Last of the Varmans: Kamarupa Series.