வெண் புள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோலுக்கு நிறம் தரும் ‘மெலனின்’ எனும் வேதிப்பொருளைச் சுரக்கும் அணுக்கள் இல்லாமல் போவதுதான் வெண் புள்ளிகள் ஆகும் .‘வெண் குஷ்டம்’ என்றும் ‘வெள்ளைத் தழும்புகள்’ என்றும் தவறாக அழைக்கப் பட்டு வந்த இவற்றை, 2010-ல் தமிழக அரசு வெளியிட்ட‌ அரசாணை தடை செய்து, வெண் புள்ளிகள்' என்று அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது வியாதியோ, குஷ்டமோ அல்ல; தோலில் தோன்றும் நிற மாற்றம் மட்டுமே. வெண் புள்ளியில் பரவும் தன்மை உடையது, பரவும் தன்மை இல்லாதது என்று இரண்டு வகை உள்ளன. இரண்டு வகைகளுக்கும் மருந்துகள் உள்ளன[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "வெண் புள்ளி பிரச்சினைக்கு புதிய முறை சிகிச்சை - ஸ்டான்லி மருத்துவமனை சாதனை". 23 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_புள்ளி&oldid=1605381" இலிருந்து மீள்விக்கப்பட்டது