வெண் கலிப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண் கலிப்பா என்பது தமிழ்ப் பாவகைகளுள் ஒன்றான கலிப்பாவின் ஒரு வகையாகும். இதில் கலிப்பா உறுப்புகளில் ஒன்றான தரவு மட்டும் இடம்பெறும். சிற்றெல்லை (குறைந்த பட்ச அடிகள் எண்ணிக்கை) நான்கடிகளாக இருக்கும் பேரெல்லைக்கு (அதிக பட்ச அடிகள் எண்ணிக்கை) வரம்பு கிடையாது. இதன் ஈற்றடி சிந்தடியாக (முச்சீர் கொண்ட அடி) வரும். பெரும்பாலும் கலித்தளை பயின்று வரும். இடையிடையே வெண்சீர் வெண்டளையும் வரும்.

எடுத்துக்காட்டு

முழங்குகுரல் முரசியம்ப முத்திலங்கு நெடுங்குடைக்கீழ்
பொழிந்தமதக் கருஞ்சுவட்டுப் பொறிமுகத்த களிறூர்ந்து
பெருநிலம் பொதுநீக்கிப் பெயராத பெருமையாற்
பொருகழற்கால் வயவேந்தர் போற்றிசைப்ப வீற்றிருப்பார்
மருள்சேர்ந்த நெறிநீக்கி வாய்மைசால் குணம்தாங்கி
அருள்சேர்ந்த அறம்புரிந்தார் அமர்ந்து

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_கலிப்பா&oldid=1390622" இலிருந்து மீள்விக்கப்பட்டது